“என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தியே”... கார்த்திக் சுப்புராஜ் பற்றி ரஜினி பேட்டி!
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், பேட்ட படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
Recommended Video

சென்னை: பேட்ட படத்தின் வெற்றி, புகழ் எல்லாமே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தான் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இளமையான தோற்றத்தில், துள்ளலான நடிப்பில் இப்படத்தில் ரஜினி நடித்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேட்ட பட ரிலீசை அவர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முதல் நாளே பேட்ட படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் ரஜினியின் நடிப்பையும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையும் பாராட்டி வருகின்றனர். இதன்மூலம் ரஜினிக்கு இன்னொரு வெற்றிப்படம் இது என்பது உறுதியாகியுள்ளது.

சென்னை வந்தார்:
இந்நிலையில், பேட்ட பட வேலைகள் முடிந்ததும் அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, நேற்றிரவு சென்னை திரும்பினார். போயஸ்கார்டன் வீட்டில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்ட படம் குறித்துப் பேசினார்.

கார்த்திக் சுப்புராஜுக்கே:
அப்போது அவர், "எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் பெருமையெல்லாம் கார்த்திக் சுப்புராஜ், சன்பிக்சர்ஸூக்கே சேரும்.

உசுப்பேற்றி நடிக்க வைத்தார்:
பேட்ட படம் பிடித்திருந்தால் மகிழ்ச்சி. மக்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம் வேலை. மற்றபடி எல்லா புகழும் கார்த்திக் சுப்புராஜூக்குதான். ஒவ்வொரு ஷாட்டும் சீனும், உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்'' எனத் தெரிவித்தார்.

பிறகு பார்க்கலாம்:
அப்போது செய்தியாளர்கள், ‘திரையில் நாயகனாக வலம் வரும் ரஜினி எப்போது தலைவனாக வருவார்?' என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அதைப் பிறகு பார்க்கலாம்' எனப் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











