முண்டாசுப்பட்டிக்கு கிடைத்த ரஜினியின் பாராட்டு!

By Shankar

சமீபத்தில் வெளியான முண்டாசுப்பட்டி படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, அந்தப் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் திருகுமரன் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் "முண்டாசுப்பட்டி".

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தபின், முண்டாசுப்பட்டி தன் மனதைக் கவர்ந்ததாகவும், மனம்விட்டுப் பல இடங்களில் சிரிக்க வைத்ததாகவும் கூறினார்.

Rajini praises Mundasupatti

படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் நடித்த அனைவரையும் பாராட்டினார் ரஜினி. குறிப்பாக முனீஷ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாக சூப்பர் ஸ்டார் தெரிவித்தார்.

படத்தின் இயக்குநர் ராம்குமார், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரையும் வெகுவாகப் பாராட்டினார்.

குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X