ரஜினியையே “வாவ்” சொல்ல வைத்த யோகிபாபு.. எதற்காக தெரியுமா?

யோகி பாபுவின் தொழில் பக்தியைப் பார்த்து பாராட்டியுள்ளாராம் ரஜினி.

Recommended Video

Darbar Movie Update: ரஜினியையே “வாவ்” சொல்ல வைத்த யோகிபாபு- வீடியோ

சென்னை: தர்பார் படத்தில் தன்னுடன் நடித்து வரும் யோகி பாபுவின் தொழில் பக்தியைப் பார்த்து பாராட்டியுள்ளாராம் ரஜினி.

தமிழின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் மட்டுமின்றி, தர்ம பிரபு, கூர்கா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். ரஜினியின் உதவியாளராக படம் முழுவதும் உடன் வரும் கதாபாத்திரம் அவருடையது எனக் கூறப்படுகிறது.

தர்மபிரபு:

தர்மபிரபு:

இதனால் நீண்ட நாட்கள் இப்படத்திற்காக அவர் கால்ஷீட் கொடுத்துள்ளார். சூப்பர்ஸ்டார் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் இணைந்து நடிக்கும் படம் என்பதால், மற்ற பட இயக்குநர்களிடம் கலந்து பேசி இப்படத்தின் கால்ஷீட்டை அவர் சரிகட்டியுள்ளார். ஆனால், தர்பார் படத்தால் யோகி பாபு நடித்து முடித்துள்ள தர்மபிரபு மற்றும் ஏ1 பட டப்பிங் பணிகள் பாதிக்கப்பட்டது.

மும்பையில் டப்பிங் பணிகள்:

மும்பையில் டப்பிங் பணிகள்:

இதனையடுத்து இந்த இரண்டு படங்களின் டப்பிங்கையும் மும்பையில் வைக்க கேட்டுக் கொண்டார் யோகிபாபு. படக்குழுவும் அதற்கு சம்மதிக்கவே, 'தர்பார்' பட படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பையில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணியை முடித்து கொடுத்துள்ளார் யோகிபாபு.

ரஜினி பாராட்டு:

ரஜினி பாராட்டு:

இதைக் கேள்விப்பட்ட ரஜினி, யோகிபாபுவின் கடுமையான உழைப்பு மற்றும் தொழில் பக்தி ஆகியவற்றை பாராட்டினாராம். நிச்சயம் இந்த கடின உழைப்பிற்குரிய பலன் அவருக்கு கிடைக்கும் எனவும் கூறினாராம். அதோடு, தர்மபிரபு படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி, நிச்சயம் அப்படத்தை பார்க்க தான் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யோகி பாபு மகிழ்ச்சி:

யோகி பாபு மகிழ்ச்சி:

ரஜினியின் வாயாலே பாராட்டு பெற்ற சந்தோசத்தில் இருக்கிறாராம் யோகி பாபு. வழக்கமாக சினிமாவில் சக கலைஞர்களின் நடிப்பை, இயக்கத்தை ரஜினி பாராட்டுவது வழக்கம் தான் என்றாலும், நடிப்பிற்காக மட்டுமின்றி, கடின உழைப்புக்காகவும் அவரிடம் பாராட்டு வாங்கியதில் யோகி பாபுவுக்கு டபுள் சந்தோசமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X