Rajini: காலைல 8 மணிக்கு சரக்கு ஊத்திக் கொடுத்த ரஜினி... டைமிங்கில் பஞ்ச் அடித்த ராதாரவி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
தசெ ஞானவேல் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினி குறித்து நடிகர் ராதாரவி பேசிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
அதில், ரஜினி தனக்கு காலையில் 8 மணிக்கு சரக்கு ஊத்திக் கொடுத்தார் என ராதாரவி பேசியது வைரலாகியுள்ளது.
ரஜினிக்கு பஞ்ச் அடித்த ராதாரவி
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாகிறது. இன்னொரு பக்கம் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
இந்நிலையில், ரஜினி குறித்து நடிகர் ராதாரவி பேசிய வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அருணாச்சலம் படம் குறித்தும், அதில் தான் நடிக்காமல் போனது பற்றியும் ராதாரவி மனம் திறந்துள்ளார். 1990களில் ரஜினியின் பல படங்களில் அவருக்கு வில்லனாக நடித்தவர் ராதாரவி. அதேபோல் அருணாச்சலம் படத்தில் ராதாரவி தான் வில்லனாக நடிக்கவிருந்தாராம்.
அதாவது ஒருநாள் காலையில் மைசூருக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராதாரவியை, தனது வீட்டிற்கு அழைத்துள்ளார் ரஜினி. இதனையடுத்து ரஜினி வீட்டுக்குச் சென்ற ராதாரவியை அரவணைத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார், அவரை தனியாக அழைத்துச் சென்று பேசியுள்ளார். அப்போது ரஜினியே தனக்கு சரக்கு ஊத்திக் கொடுத்ததாக ராதாரவி கூறியுள்ளார். முக்கியமாக அது காலை 8 மணி தான் எனவும், அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் இருவரும் சரக்கு அடித்தோம்.
பின்னர் அருணாச்சலம் படத்தை பி வாசு இயக்கவிருந்ததார். அதில் உங்களை தான் வில்லனாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தோம் என ராதாரவியிடம் ரஜினி கூறியுள்ளார். ஆனால் தற்போது பி வாசுவுக்குப் பதிலாக சுந்தர் சி டைரக்ட் செய்யவுள்ளதாகவும், இப்போது 3 வில்லன்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினாராம். இதனால், அருணாச்சலம் படத்திலிருந்து உங்களை தூக்கிவிட்டதாக ராதாரவியிடம் ரஜினி கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட ராதாரவி, தான் திறமையான நடிகராக இருந்தாலும், அதிர்ஷ்டத்தில் ஹீரோவான உங்களை தேடி வரும் சூழலில் தான் இன்றைய சினிமா இருப்பதாக நோஸ்கட் செய்துள்ளார். மேலும், அருணாச்சலம் படம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாத நிலையில் ரஜினி ஏன் இப்படியெல்லாம் செய்ய வேண்டும் எனவும் ராதாரவி பேசியது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











