Rajini: “என்ன பெரிய ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ்..” துவம்சம் செய்த ரஜினி... இதுதான் Fan-Boy சம்பவம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ரஜினி துவம்சம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டர்களை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ரஜினியின் Fan-Boy சம்பவம்
ஜெயிலர் திரைப்படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் அவரது நடிப்பில் உருவாகும் வேட்டையன் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனிடையே அவர் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதனையடுத்து இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். வேட்டையன் வெளியானதும் லோகேஷ் கனகராஜ்ஜின் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் செம்ம கெத்து காட்டியுள்ளார்.

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ஹிட் மேன், ஹல்க், தோர், ஜோக்கர் என இப்படி பல வெரைட்டியான கேரக்டர்கள் ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்களாக கலங்கடித்து வருகின்றன. இவர்களின் வீர தீர சாகசங்களை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எப்பேற்பட்ட வில்லன்களையும் புரட்டி எடுக்கும் இந்த சூப்பர் ஹீரோக்களை, நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் துவம்சம் செய்தால் எப்படி இருக்கும். இப்படி கனவில் கூட நினைத்துப் பார்கக முடியாத சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. அதன்படி, ஸ்பைடர் மேனை கழுத்தில் பிடித்து கொத்தாக சம்பவம் செய்கிறார் ரஜினி. சூப்பர் மேனுக்கு ஒரு பஞ்ச், ஹிட் மேனுக்கு நச்சுன்னு ஒரு குத்து, தோரை தாறுமாறாக பஞ்சர் செய்வது என ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களையும் ரஜினி பொளந்து கட்டுவது போல போஸ்டர்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

சமீபத்தில் உலகையே மிரட்டி வரும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த போஸ்டர்கள், ரஜினி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து மார்வெல் ஹீரோக்களை மஜா செய்த தலைவர் வாழ்க என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். மேலும், தங்களுக்குப் பிடித்த போஸ்டர் எது என்றும், இப்படியொரு சம்பவம் ரியலாகவே ஒரு படமாக உருவாக வேண்டும் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.








Click it and Unblock the Notifications











