Rajini: "தலைவருக்கு அங்கேயும் ஸ்டைல் தானா?” பார்ரா!! பணம் எடுத்ததும் தெரியல வச்சதும் தெரியல!!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான ரஜினி, இன்னொரு பக்கம் தனது ஆன்மீக பயணத்தில் பிஸியாக காணப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் கோயிலுக்குச் சென்றிருந்த ரஜினி, அங்கு ஸ்டைலாக பணம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கோயிலிலும் ஸ்டைலு ஸ்டைல் தான் : சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், ரஜினிக்கு சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினி, சன் பிக்சர்ஸ், நெல்சன், அனிருத் என பிரமமாண்ட கூட்டணியில் வெளியான ஜெயிலர், அதனை விடவும் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது.
திரையரங்குகளில் 600 கோடிக்கும் மேல் வசூலித்த ஜெயிலர், கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஜெயிலர், ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ரஜினி, இயக்குநர் நெல்சன், அனிருத் மூவருக்கும் சொகுசு கார் பரிசாக கொடுத்து அசத்தினார்.
முன்னதாக ஜெயிலர் வெளியாகும் முன்னரே இமயமலை சென்றிருந்த ரஜினி, அங்கிருந்து உபியில் உள்ள ராமர் கோயில் சென்றும் வழிபட்டார். சென்னை திரும்பிய பிறகும் தொடர்ச்சியாக பல கோயில்களுக்கு சென்று வருகிறார் ரஜினி. அப்படியாக சமீபத்தில் அவர் கோயிலுக்குச் சென்றிருந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ரஜினி கோயிலில் வழிபாடு செய்துவிட்டு தட்சணை தட்டில் பணம் வைக்கும் வீடியோ தான் அது.
வெள்ளை நிற வேஷ்டி, குர்தா அணிந்திருக்கும் ரஜினி, தனது இடது கையின் மடிப்பில் மறைத்து வைத்திருந்த பணத்தை வேகமாக எடுத்து, அதனை தட்சணை தட்டில் வைத்துவிட்டு அமைதியாக நிற்கிறார். திரைப்படங்களில் மின்னல் வேகமாக ஸ்டைலான காட்சிகளில் நடிப்பதை போல, ரியலாகவும் ரஜினி பணம் வைத்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரஜினியின் ஸ்டைலை பாராட்டி வருகின்றனர்.
தலைவர் எப்போதுமே ஸ்டைல் மேன் தான், பணத்தை எடுக்குறதும் தெரியல, வைக்கிறதும் தெரியலையே என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். மேலும், தங்களது அப்பாவும் இதேபோல் தான் கோயிலுக்குச் செல்லும் போது பணத்தை சட்டை கையில் மறைத்துவைத்து கொடுப்பது வழக்கம். ரஜினியும் அதேபோல் ரொம்ப சிம்பிளாக இருப்பது சூப்பர் என கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











