Rajini: ஜெயிலர் லாபத்தில் ரஜினிக்கு ஷேர் எத்தனை கோடின்னு தெரியுமா..? இதுதான் தலைவர் கணக்கு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து நேற்று ரஜினியை சந்தித்திருந்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

அப்போது அவர் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் லாபத்தில் ரஜினிக்கு ஷேர் கொடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில், அது எத்தனை கோடி என்பது தெரியவந்துள்ளது.

 Rajini: Rajini has been given a share of 100 crore rupees in Jailer profit

ரஜினி ஷேர் எத்தனை கோடின்னு தெரியுமா..?: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சால்ட் & பெப்பர் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக நடித்திருந்த ரஜினி, ஆக்‌ஷன் காட்சிகளிலும் மாஸ் காட்டியிருந்தார். ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக ஜெயிலர் படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

ஜெயிலர் திரைப்படம் முதல் வாரம் 375 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இரண்டாவது வாரம் 150 கோடி மட்டுமே வசூலித்தது. ஆனாலும் மொத்தமாக 525 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்திருந்தது. இந்நிலையில் மூன்று வாரங்கள் முடிவில் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் 600 கோடிகளுக்கும் அதிகம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரஜினி உட்பட ஜெயிலர் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

ஜெயிலருக்கு முன்பாக வெளியான ரஜினியின் அண்ணாத்த, நெகட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் நஷ்டம் அடைந்தது. அதனை ஈடுகட்டும் விதமாக ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக வசூலித்துள்ளது. இதனையடுத்து ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் ரஜினி. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து செக் கொடுத்திருந்தார்.

 Rajini: Rajini has been given a share of 100 crore rupees in Jailer profit

இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தனது டிவிட்டரில் வெளியிட்டது. இது ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் லாபத்தில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட ஷேர் என சொல்லப்படுகிறது. அண்ணாத்த தோல்வியால் ஜெயிலர் படத்துக்காக 80 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் ரஜினி. ஆனால், ஜெயிலர் வசூலில் குறிப்பிட்ட தொகையை ஷேரிங்காக கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்படி ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் லாபத்தில் இருந்து ரஜினியின் பங்கை செக் போட்டுக் கொடுத்துள்ளார் கலாநிதி மாறன். இந்த தொகை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அது 100 கோடி ரூபாய்க்கான செக் என தெரியவந்துள்ளது. சம்பளம் 80 கோடி போக, லாபத்தில் 100 கோடி ஷேர் என மொத்தம் 180 கோடியை தட்டித் தூக்கியுள்ளார் தலைவர். ஆனாலும் இதுகுறித்து அபிஸியலான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X