Rajini: “மூணு வயசு பையனுக்கு ரஜினி தலைவரா..?” பிரபலத்தை ரோஸ்ட் செய்த ப்ளூ சட்டை!
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை தலைவர் என திரையரங்கில் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் விஜய்யின் மகனும் ரஜினியை தலைவா என அழைத்த வீடியோ டிவிட்டரில் வைரலானது. இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயனிடம், 'ரஜினி தலைவரா' என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூணு வயசு பையனுக்கு ரஜினி தலைவரா..?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்தை உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படத்தின் பாடல்களில் இடம்பெற்ற வரிகளை டிவிட்டரில் ஹேஷ்டேக்காக ட்ரெண்ட் செய்தனர். அதன்படி, "தலைவரு நிரந்தரம், அலப்பறையை கிளப்புறோம்" என விதவிதமாக வைரலாகின.
ரஜினியை சூப்பர் ஸ்டார், தலைவர் என அழப்பதே அவரது ரசிகர்களின் வழக்கம். அதிலும் 'தலைவர்' என அவரை கொண்டாட பெருங்கூட்டமே உள்ளது. வயது வித்தியாசம் இல்லாமல் பல தரப்பினரும் ரஜினியின் ரசிகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை இயக்குநர் ஏ.எல் விஜய் தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார்.
அதன் பின்னர் அவரது மகன், "தலைவா ஜெயிலர் சூப்பர்" என உற்சாகமான வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டானது. சிறுவனான இயக்குநர் விஜய்யின் மகன், ரஜினியை தலைவர் என அழைத்தது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் இதுகுறித்து பேசியுள்ளார். அதாவது தான் முதல் நாள் ஜெயிலர் பார்க்க தியேட்டர் சென்றதாகவும், அங்கே ஒரு மூன்று வயது சிறுவன் ரஜினியை திரையில் பார்த்ததும் தலைவர் என கத்தியதாகவும் கூறியுள்ளார்.
அதாவது இயக்குநர் விஜய்யின் மகன் மட்டும் இல்லாமல், 3 வயது சிறுவர்கள் முதல் 60, 70 வயது பெரியவர்கள் வரை ஜெயிலர் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் ரஜினியை தலைவராக கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த சிறுவனை வீடியோ எடுக்க முடியவில்லை... எடுத்திருந்தால் ஷேர் செய்திருப்பேன் எனவும் தனஞ்செயன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இதனைப் பார்த்து டென்ஷனான ப்ளூ சட்டை மாறன், தனஞ்செயனின் பேட்டி கொடுத்த வீடியோவை ஷேர் செய்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, "ரஜினியை பார்த்து தலைவா என கத்திய அந்த பையன்கிட்ட 'நாட்டுக்கு பாடுபட்ட காந்தி, காமராஜர், பகத்சிங் போன்றோரை தலைவா என்று சொல்றதுதான் சரி' ன்னு சொல்லிட்டு வரலையா சார்?, அதை விட்டுட்டு அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை செல்போன்ல வீடியோ எடுக்கலைன்னு வருத்தம் வேற படறீங்க. ஒரு சாதாரண படத்துக்கு இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் என்ன சார்?"
"மூணு வயசு பையனை பத்தி திரும்ப திரும்ப பேசுறீங்க. விட்டுருங்க. அந்த தலைமுறையாவது உண்மையான, உருப்படியான தலைவர்களை பத்தி படிக்கட்டும். படிச்ச நீங்களும் வளர்ந்து வரும் புதிய தலைமுறையை.. ஹீரோயிச மோகத்துக்கு நேரடியாவோ, மறைமுகமாவோ தூண்ட காரணமா இருக்காதீங்க" என பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











