Rajini: ரஜினியிடம் ஓவரா சீன் போட்ட ‘டான்’ இயக்குநர்... சுளுக்கு எடுத்துவிட்ட சூப்பர் ஸ்டார்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த சிபி சக்ரவர்த்தி, ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளதாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. அதன்படி சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையை கேட்டு ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன் தற்போது தெரியவந்துள்ளது.

சிபி சக்ரவர்த்தியை சுளுக்கு எடுத்த சூப்பர் ஸ்டார்
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. லைகா தயாரித்த இந்தப் படத்தின் மூலம் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிமுகமானார். அவரது முதல் படமான டான் கமர்சியல் ஹிட்டாக அமைந்தது. சிவகார்த்திகேயனுடன் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, ப்ரியங்கா மோகன், சூரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனிருத் டான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

 Rajini: Rajini scolded after hearing the story told by Director Cibi Chakravarthy

டான் கொடுத்த வெற்றியால் உற்சாகமான சிபி சக்ரவர்த்தி, தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையவிருந்தார். இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினி ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்பட்டது. அதன்படி இது தான் தலைவர் 171 படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சிபி சக்ரவர்த்திக்கு பதிலாக தசெ ஞானவேல் தலைவர் 171 இயக்குநராக கமிட்டானார்.

அதனைத் தொடர்ந்து தலைவர் 171 என்ற வேட்டையன் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபி சக்கரவர்த்தி தற்போது டோலிவுட் ஹீரோ நானி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் நானி ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளதாம். இதனையடுத்து சிபி சக்ரவர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது அடுத்த படத்தில் பணிபுரிய உதவி இயக்குநர்கள் தேவை என அறிவித்துள்ளார். கதை, திரைக்கதையை புரிந்துகொண்டு எழுதும் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். இலக்கியம், சினிமாவில் நல்ல ஞானம் வேண்டும், தமிழ், தெலுங்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும், ஷார்ட் ஃபிலிம் மேக்கர்ஸ், ஃபிலிம் இன்ஸ்டியூட் ஸ்டூடண்ட் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்படும் என விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துள்ளனர்.

வடிவேலுவின் மீம்ஸுடன் "டான் படம் எடுத்தவனே இவ்வளவு குவாலிபிகேஷன் கேக்குறான்னா... மிஷ்கின் கிட்டலாம் சேரணும்ன்னா" என ட்ரோல் செய்துள்ளனர். அதேபோல், "ஏன்னா... அவரு டானை விட பெரிய லார்டு லபக்குதாஸ்... இவர லைகா கமிட் பண்ணி ரஜினிய வச்சு படம் பண்றதா இருந்தது... ரஜினி கிட்ட கதையும் சொன்னார்... அதக் கேட்டுட்டு இவர விட்டுவிட்டு லைகாவுக்கு விடு விடுன்னு விட்டார் ரஜினி... அதோட அந்தப் படம் ட்ராப் ஆக டோலிவுட் சென்றார்" என பங்கம் செய்துள்ளனர்.

மேலும், "ஒரு கோடி இல்ல... இரண்டு கோடி இல்ல... பல கோடி சம்பளம் கேட்டு பந்தா காட்டினார்... இந்தப் பக்கம் வந்துடாதன்னு கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வச்சிட்டாங்க... இப்ப டான் கையில சிக்கியிருக்குற சில்வண்டு பாடுதான் பெரும்பாடு... பாவமும்தான்..." என டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர். அதாவது ரஜினியிடம் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையை கேட்டு சூப்பர் ஸ்டார் செம்ம டென்ஷனாகி விட்டாராம். இதனால் லைகாவிடம் போன் போட்டு இதெல்லாம் ஒரு கதையான்னு எகிறியுள்ளார் ரஜினி.

அதேபோல் சம்பள விஷயத்திலும் லைகாவிடம் ஓவராக கெத்து காட்டியுள்ளாராம் சிபி. இதன் காரணமாக தான் சிபி சக்ரவர்த்திக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு அனுப்பி வைத்துவிட்டார்களாம். இப்படியெல்லாம் பங்கம் செய்யப்பட்ட சிபி சக்ரவர்த்தி தற்போது உதவி இயக்குநர்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளதையும் ட்ரோல் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X