Rajini: “பத்து வருஷத்துல ஒரு படம் கூட ஹிட்டாகல..” டாப் ஹீரோவை பங்கமாக கலாய்த்த ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த், டாப் ஹீரோ ஒருவரை பங்கமாக கலாய்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பத்து வருசத்துல ஒரு படம் கூட ஹிட் இல்ல: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களும் ஜெயிலர் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். ரஜினிக்கு இது தரமான கம்பேக் எனவும் பாராட்டியிருந்தனர்.

 Rajini: Rajini trolled the top actor at Lal Salaam audio launch

அதேபோல், விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு நெகட்டிவான விமர்சனம் கிடைத்ததால் நெல்சனும் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார். இதனால் அவருக்கும் ஜெயிலர் கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது. இந்நிலையில் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அதற்கும் முன்னதாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ள லால் சலாம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் லால் சலாம் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏஆர் ரஹ்மான், லைகா சுபாஸ்கரன், ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் நேற்று ஒளிப்பரப்பானது. அப்போது ரஜினி பேசிய வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில் ரஜினி தனது நண்பரும் உச்ச நடிகருமான ஒருவரை பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது ஜெயிலர் வெளியானதும் அவரது நண்பரும் டாப் ஹீரோவுமான ஒருவர் படம் பார்க்க வேண்டும் என ரஜினியிடம் கேட்டிருந்தாராம்.

 Rajini: Rajini trolled the top actor at Lal Salaam audio launch

ரஜினியை 'அவன் - இவன்' என ஒருமையில் கூப்பிடும் அளவிற்கு உரிமையான அந்த ஹீரோவுக்கு ஜெயிலர் படத்தை தனியாக ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துவிட்டு ரஜினியிடம் பேசிய அந்த ஹீரோ, "30% படம் சூப்பர்... 70% வயிறெல்லாம் எரியுதுடா... எப்படி உனக்கு மட்டும் இப்படிலாம் டைரக்டர்ஸ் கிடைக்குறாங்க. நெல்சன் கிட்ட சொல்லி எனக்கு ஒரு படம் பண்ண சொல்லு. அவருக்கு எவ்ளோனாலும் சம்பளம் கொடுக்குறேன்" எனக் கேட்டாராம்.

அதனை கேட்ட ரஜினி, நெல்சன் அப்படிலாம் படம் பண்ண மாட்டார்ன்னு சொல்லிட்டேன். அதுமட்டும் இல்லாமல் அந்த ஹீரோவுக்கு பத்து வருசத்துல ஒரு படம் கூட ஹிட் ஆகல என பங்கமாக கலாய்த்தார். ரஜினி இப்படி சொன்னது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லது மோகன்பாபு இருவரில் ஒருவராக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சிரஞ்சீவி, மோகன்பாபு இருவருமே ஹிட் மூவிஸ் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மோகன்பாபு தான் ரஜினியை பொது இடங்களில் கூட உரிமையாக ஒருமையில் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X