Rajini: திடீரென சொந்த ஊர் சென்ற ரஜினி... அம்மா, அப்பா நினைவிடத்தில் மரியாதை... நெகிழ்ச்சியான சம்பவம்
கிருஷ்ணகிரி: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.
அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனால் அதிக உற்சாகத்தில் இருக்கும் ரஜினிகாந்த், ஆரம்பகாலத்தில் தான் பணியாற்றிய பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊர் சென்றுள்ள ரஜினி, அவரது பெற்றோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வழிபட்டுள்ளார்.

அம்மா, அப்பா நினைவிடத்தில் ரஜினி மரியாதை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், சூப்பர் ஸ்டாருக்கு தரமான கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்கள் ரஜினிக்கு எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை.
இதனால், ஜெயிலர் படத்தை அதிகம் நம்பியிருந்தார் ரஜினி. இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரின் படம் பாக்ஸ் ஆபிஸில் ரியல் சம்பவம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், படக்குழுவினருடன் கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடினார்.
இன்னொரு பக்கம் லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் பூஜையும் சைலண்டாக நடந்து முடிந்தது. இதனிடையே பழசை மறக்காத ரஜினி, இரு தினங்களுக்கு முன்னர் பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழகம் சென்றிருந்தார். அங்கு ஆரம்பகாலத்தில் தான் பணியாற்றிய பணிமனையை பார்வையிட்ட ரஜினி, தனது பழைய நண்பர்களையும் சந்தித்தார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அதன்பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார் ரஜினி. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சத்யநாராயண ராவ் கெய்குவாட் உடன் விசிட் செய்தார். அப்போது அவருடன் சேர்ந்து தனது அம்மா, அப்பாவின் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபட்டார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினி தனது அம்மா, அப்பா நினைவிடம் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் தனது அம்மா, அப்பாவின் நினைவிடத்தில் அவர்களுக்கு கோயில் கட்ட ரஜினி முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது திடீரென சொந்த ஊர் சென்ற ரஜினிகாந்த், அம்மா, அப்பா நினைவிடத்தில் நீண்டநேரம் அமர்ந்திருந்து மரியாதை செய்துள்ளார். இந்த புகைப்படங்களை ரஜினியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











