Rajini: ஜெயிலர் சக்சஸ்... ரசிகர்களை பார்த்து உற்சாகமான ரஜினி... அது மட்டும் மாறவே இல்லயே!
கோவை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.
முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
அதேநேரம், ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படம் பற்றியும் அபிஸியல் அப்டேட்டும் வெளியானது.
இந்நிலையில், கோவை சென்றிருந்த ரஜினி, ரசிகர்களை சந்தித்த போட்டோ வைரலாகி வருகிறது.

ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார்: ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி ரொம்பவே பிஸியாக காணப்படுகிறார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இதனையடுத்து ஜெயிலர் படத்தின் வெற்றியை, தாறுமாறாக கொண்டாடித் தீர்த்தது படக்குழு.
சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருக்கு 1.5 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக கொடுத்தார் கலாநிதிமாறன். அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ஜெயிலர் சக்சஸ் மீட் உட்பட வெற்றிக் கொண்டாட்டங்களும் களைகட்டியது. இதனால் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இன்னொருபக்கம் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புக்காக ரெடியாகிவிட்டார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், அமிதாப், ஃபஹத் பாசில், நானி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் ரஜினியின் தலைவர் 171 பட அப்டேட்டும் அபிஸியலாக வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. அதன்படி, அனைவரும் எதிர்பார்த்த ரஜினி - லோகேஷ் கூட்டணி தலைவர் 171ல் இணைகிறது.
முக்கியமாக லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 என மூன்று படங்களுமே அடுத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லால் சலாம் 2024 தொடக்கத்திலும், தலைவர் 170 சம்மர் ஸ்பெஷலாகவும், தலைவர் 171 தீபாவளி சரவெடியாகவும் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் தலைவர் ரசிகர்கள் அதி உற்சாகமாக காணப்படுகின்றனர். இந்நிலையில், ரஜினியின் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
ஜெயிலர் வெற்றி விழாவை முடித்துவிட்டு கோவை சென்றிருந்தார் ரஜினிகாந்த். அப்போது அவரைப் பார்க்க விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். காரில் இருந்து இறங்ககூட முடியாத நிலையில், ரசிகர்களை பார்த்து உற்சாகமான ரஜினி, வழக்கம்போல தனது ட்ரேட் மார்க் கும்பிடு ஒன்றை போட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார். ரசிகர்களை பார்த்தால் ரஜினி கும்பிடு போடுவதை மட்டும் விடவே மாட்டார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











