Rajini: “தம்பி நீ தான் எனக்கு ரோல் மாடல்..” அயலான் வைப்... சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி!

சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. தற்போது தெலுங்கிலும் நேரடியாக ரிலீஸான அயலானுக்கு டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே அயலான் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் என்பது குறித்து சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார்.

ரஜினிக்கு ரோல் மாடலான சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கிய அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான், பல தடைகளை கடந்து இப்போது வெளியாகியுள்ளது.

 Rajini: Rajinikanth watched Ayalaan movie and praised Sivakarthikeyan


ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவான அயலான் படத்தை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனால், பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது அயலான். சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் ரவிக்குமாருக்கும் அயலான் கம்பேக் படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது நேரடியாக தெலுங்கு மொழியிலும் வெளியாகியுள்ளது.

அயலான் தெலுங்கு ரிலீஸை முன்னிட்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன் அயலான் படம் குறித்து ரஜினிகாந்த் பாராட்டியதையும் அங்கு குறிப்பிட்டிருந்தார். அதில் “அயலான் படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் ரொம்பவே பாராட்டினார். மேலும், எப்படி இதுமாதிரி புது ஜானர் படங்களை தேர்வு செய்து நடிக்கிறீங்க எனவும் ஆச்சர்யமாக கேட்டார்.”

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ரஜினியின் எந்திரன், 2.O படங்கள் தான் அயலானுக்கு இன்ஸ்பிரேஷன் என்றுள்ளார். ஆனால், அயலான் படம் பார்த்த பின்னர் நீங்க தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார் ரஜினி. இதனை அயலான் தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியது அங்கிருந்த ரசிகர்களுக்கும் வைப் கொடுத்தது.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் தான் அவரது மகன் கேரக்டரில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் கடைசியில் வசந்த் ரவி தான் ரஜினியின் மகனாக நடித்தார். அதேபோல், நெல்சன் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் சிவா நடிக்கலாம் என செய்திகள் வெளியாகின. ஆனாலும் இதுபற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் அயலான் படத்தை ரஜினி பார்த்ததும், சிவகார்த்திகேயனை பாராட்டியதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X