Rajini: “வயசானாலும் அந்த ஸ்டைல்..” தலைவர் 170 படத்துக்காக செம்ம மாஸ் லுக்கில் வலம் வரும் ரஜினி!

திருவனந்தபுரம்: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார்.

தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்துக்கு தற்போதைக்கு தலைவர் 170 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 Rajini: Rajinikanths Thalaivar 170 new look photo is trending

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இந்தப் படத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ள ரஜினியின் புதிய லுக் போட்டோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

வயசானாலும் அந்த ஸ்டைல்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் துவண்டிருந்த ரஜினிக்கு, ஜெயிலர் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதனையடுத்து தனது மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்தார். லால் சலாம் ஷூட்டிங் முடிந்துவிட்டதால், அடுத்து தலைவர் 170 படத்தில் பிஸியாகிவிட்டார்.

லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் மூன்று தினங்களுக்கு முன்னர் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. முன்னதாக தலைவர் 170 படத்தின் பூஜையும் நடைபெற்றது.

தலைவர் 170 அபிஸியல் அப்டேட், பூஜை நிகழ்ச்சியில் ரஜினியின் லுக் செம்ம மாஸாக இருந்தது. ரெட்ரோ லுக்கில் மிக இளமையாக கெத்து காட்டியிருந்தார் தலைவர். ஜெயிலர் படத்திலும் ரஜினியின் ஸ்டைல், மேனரிசம் & லுக் அனைத்தும் ரசிகர்களை வசீகரித்தது. இப்போது அதைவிடவும் தலைவர் 170 லுக் தாறுமாறு சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில், தலைவர் 170 படத்தில் ரஜினியின் நியூ லுக் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது. அதில், கறுப்பு சட்டையும் வெள்ளை நிற பேண்ட்டும் அணிந்தபடி செம்ம கெத்தாக மாஸ் காட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார். இரு தினங்களுக்கு முன் ரசிகர்களை சந்திக்கும் போது இருந்த ரஜினியின் லுக்கிற்கும், இப்போது வெளியான போட்டோவுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதாக தலைவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, தலைவர் 170 படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் பவர்ஃபுல் கேரக்டர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மெயில் வில்லனாக ஃபஹத் பாசில் நடிக்கவிருப்பதும் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X