Rajini: "சூப்பர் ஸ்டாரின் அடுத்த குட்டி ஸ்டோரி ரெடி..” பரபரக்கும் லால் சலாம் ஆடியோ லான்ச் அப்டேட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம் வெளியாகவுள்ளது.

 Rajini: Rajinis Lal Salaam Audio Launch expected Dec 2nd Week

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

லால் சலாம் ஆடியோ லான்ச் அப்டேட்
கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், இந்தாண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியது. தொடர்ச்சியாக தோல்வியால் துவண்டிருந்த ரஜினிக்கு, ஜெயிலர் சூப்பரான கம்பேக் படமாக அமைந்தது.

முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், தனது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி பேசியிருந்தார். அதேபோல், காகம் - பருந்து என குட்டி ஸ்டோரியும் சொல்லி, ரசிகர்களுக்கு வைப் கொடுத்தார். முக்கியமாக ரஜினியின் இந்த பேச்சு, விஜய்யை அட்டாக் செய்வதாக இருந்தது என நெட்டிசன்கள் கூறி வந்தனர். இதற்கெல்லாம் லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், லியோ ஆடியோ லான்ச் கடைசி நேரத்தில் கேன்சல் ஆனதால், விஜய் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றனர். அதற்கும் சேர்த்து நேற்று லியோ வெற்றி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் விஜய்யின் பேச்சும் அவர் சொன்ன குட்டி ஸ்டோரியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரத்னகுமார் தொடங்கிய பருந்து - காகம் கதையை, இறுதியாக விஜய் முடித்து வைத்தார்.

விஜய் பல இடங்களில் ரஜினியை டார்க்கெட் செய்தே பேசியதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு பதிலடி கொடுக்க ரஜினியும் ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி டிசம்பர் 2வது வாரம் லால் சலாம் ஆடியோ லான்ச் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதனால், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் குட்டி ஸ்டோரி குதூகலமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X