Rajini: ரயிலும் இல்ல தண்டவாளமும் கிடையாது... தற்கொலை நாடகமாடிய ரஜினி... என்னவொரு புத்திசாலித்தனம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், நெல்சன் ஆகியோரது இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தண்டவாளம் இல்லாமல் ரயிலும் வராத இடத்தில் ரஜினி தற்கொலை நாடகமாடிய சம்பவம் வைரலாகி வருகிறது.

தற்கொலை நாடகமாடிய ரஜினிகாந்த்
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இதனால் வேட்டையன் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் பிப்ரவரி 9ம் தேதி ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Rajini: Rajinis Sivaji movie making video is trending on Twitter

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் ரஜினியுடன் மூன்று படங்களில் பணி புரிந்துள்ளார். அதில் முதல் படமாக ரஜினியின் சிவாஜி தி பாஸ் 2007ம் ஆண்டு வெளியானது. ஏவிஎம் நிறுவனத்துக்காக ரஜினி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக ஸ்ரேயாவும், வில்லனாக சுமனும் நடித்திருந்தனர். முக்கியமான பாத்திரங்களில் மறைந்த நடிகர்கள் விவேக், மணிவண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சிவாஜி படத்திற்கு இசையமைத்திருந்தார். ஷங்கரின் வழக்கமான் ஃபார்மட்டில் பக்கா கமர்சியல் மூவியாக உருவான சிவாஜி, பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

 Rajini: Rajinis Sivaji movie making video is trending on Twitter

இந்தப் படத்தில் ரஜினி, விவேக் இருவரது கூட்டணியில் காமெடி காட்சிகளும் செம்ம ஹிட் அடித்தன. இந்நிலையில், சிவாஜி படத்தில் ஸ்ரேயா ரஜினியின் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்போது ரஜினி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவார். அதாவது ஸ்ரேயாவுக்காக ரஜினி தற்கொலைக்கு முயல்வதை போல நடிக்க வேண்டும். அதில் ஸ்ரேயா மனம் மாறவில்லை என்றால் விவேக் ரயிலில் இருக்கும் அவசர கால செயினை பிடித்து இழுத்து நிறுத்த வேண்டும்.

இக்காட்சியில் விவேக் செயினை பிடித்து இழுக்கும் போது ரயில் நிற்காது, உடனே ஸ்ரேயா அந்த ரயிலை நிறுத்தி சூப்பர் ஸ்டாரின் காதலையும் ஏற்றுக்கொள்வார். இக்காட்சியை பார்ப்பவர்களுக்கு ரஜினி உண்மையிலேயே ரயிலை நோக்கி வேகமாக நடப்பதை போல இருக்கும். ஆனால், அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இந்த காட்சியின் மேக்கிங் வீடியோவில் ரயிலும் இல்லாமல் தண்டவாளமும் இல்லாமல் க்ரீன் மேட் வைத்தே ஷூட் செய்துள்ளார் ஷங்கர்.

ஆனாலும் ரஜினியின் நடிப்பும் கிராபிக்ஸும் மிக தத்ரூபமாக வந்திருக்கும். ரயிலும் தண்டவாளமும் இல்லாமல் ரஜினியும் ஷங்கரும் சேர்ந்து ரசிகர்களை இப்படியெல்லாமா ஏமாற்றுவார்கள் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இப்போதெல்லாம் இதைவிடவும் பயங்கரமான காட்சிகள் க்ரீன் மேட்டில் ஷூட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X