Rajini: ரெடின் கிங்ஸ்லி, ஜாஃபருக்கு ரஜினி கொடுத்த ‘ஜெயிலர்’ Vibe... ட்ரெண்டாகும் க்யூட் போட்டோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்புடன் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, சன் பிக்சர்ஸ் சார்பில் சக்சஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார், ஜெயிலரில் நடித்த ரெடின் கிங்ஸ்லி, ஜாஃபர் சாதிக் ஆகியோருடன் எடுத்த க்யூட்டான போட்டோ வைரலாகி வருகிறது.

ரெடின் கிங்ஸ்லி, ஜாஃபருக்கு தலைவர் கொடுத்த வைப்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளது ஜெயிலர். பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களால் தடுமாறி நின்ற தலைவர், ஜெயிலர் வெற்றியால் ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மாரிமுத்து, ரெடின் கிங்ஸ்லி, டான்ஸர் ஜாஃபர் சாதிக், சுனில் ரெட்டி ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். கமர்சியலாக ஹிட் அடித்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஜெயிலர் படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல், ஜெயிலர் சக்சஸ் மீட்டிங் சென்னையில் நடைபெற்றது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ரெடின் கிங்ஸ்லி, டான்ஸர் ஜாஃபர், சுனில் ரெட்டி மூவரும் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
ஜாஃபர், ரெடின் கிங்ஸ்லி இருவரையும் தோளோடு தோளாக அணைத்துக்கொண்டு வைப் கொடுத்துள்ளார் தலைவர். அவர்கள் அருகில் சுனில் ரெட்டியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமன்னாவின் காதலராகவும் இயக்குநராகவும் நடித்த சுனில் ரெட்டியின் உதவி இயக்குநராக ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்தார். ரெடின் கிங்ஸ்லியின் திவ்யா என்ற கேரக்டர், ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆனது.
நெல்சனின் குரூப்பில் தவிர்க்க முடியாத நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கு, ஜெயிலர் முக்கியமான படமாக அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த மகிழ்ச்சியை விடவும், அவர் தன்னை கட்டிப் பிடித்து வாழ்த்தியது மறக்கவே முடியாது என ரெடின் கிங்ஸ்லி உற்சாகமாகியுள்ளார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ரெடின் கிங்ஸ்லி, ஜாஃபர், சுனில் ரெட்டி எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











