இயக்குநரை விரட்டி விட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பு கொடுத்த கமல்.. சுவாரஸ்ய பின்னணி தகவல்!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையை கேட்டு வேண்டாம் என்று விரட்டி விட்ட இளம் இயக்குநருக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த அந்த படத்தில், தங்கை மேல் உயிரை வைத்து இருக்கும் அண்ணாக நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர்

ரஜினிகாந்தின் ஜெயிலர்

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் தீலிப்குமார் இயக்கி வரும், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன, ரஜினிகாந்த்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. கடந்த மாதம் பெங்களுரில் காந்தாரா படத்தில் இடம் பெற்ற பண்ணை வீட்டில், ஷிவா ராஜ்குமார் மற்றும் ரஜினிகாந்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இயக்குநருக்கு நோ சொன்ன ரஜினி

இயக்குநருக்கு நோ சொன்ன ரஜினி

இந்த படத்தைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து, தனது அடுத்த படத்திற்காக பல இயக்குநர்களுடன் கதை கேட்ட ரஜினி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் கதை கேட்டுள்ளார். ஆனால், அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால், அவருக்கு நோ சொல்லி இருக்கிறார்.

ஞானவேல் இயக்கத்தில்

ஞானவேல் இயக்கத்தில்

இதையடுத்து, ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதில், ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாய்ப்பு கொடுத்த கமல்

வாய்ப்பு கொடுத்த கமல்

ரஜினிகாந்த் கதைக்கு நோ சொன்னதால், டென்ஷனான தேசிங்கு பெரியசாமி பல தயாரிப்பு நிறுவனத்தின் படி ஏறி இறங்கி உள்ளார். இதையடுத்து, கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசனிடம் கதை கூற அவருக்கு கதை பிடித்து போனதால், இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது.

சிம்பு 48 சிறப்பு தோற்றத்தில் கமல்

சிம்பு 48 சிறப்பு தோற்றத்தில் கமல்

இப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க இருக்கிறார், இதில், சிம்புவுடன் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார்.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X