ரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் "அண்ணாத்த"! கெத்துதான் போங்க!! #Annaatthe #Thalaivar168

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது படத்தின் தலைப்பு அண்ணாத்த என அதிகாரப்பூர்வமாக றிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

ரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் 'அண்ணாத்த'! கெத்துதான் போங்க!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தர்பார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகர் நடிகைகள்

நடிகர் நடிகைகள்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோ நடிக்கின்றனர். இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் சூரி மற்றும் சதீஷும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ரஜினி கெட்ட அப்

ரஜினி கெட்ட அப்

படத்தின் கதை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்கிறார் என்றும் நடிகை நயன்தாரா வக்கீலாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இதனிடைய படத்தில் ரஜினியின் கெட்டப் குறித்த போட்டோவும் அண்மையில் லீக்கானது.

ட்ரென்டிங்

ட்ரென்டிங்

இந்நிலையில் தலைவர் 168 படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ஸர்ஸ் அறிவித்தது. இதனால் கொண்டாட தயாரான ரஜினி ரசிகர்கள் #Thalaivar168 என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து அப்டேட் என்னவாக இருக்கும் என கேட்டு வந்தனர்.

படத்தின் பெயர் அண்ணாத்த

படத்தின் பெயர் அண்ணாத்த

இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சொன்னப்படி அப்டேட் வெளியானது. அதன்படி சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த என அறிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பேக்கிரவுண்டில் சிவப்பு நிற எழுத்துக்களை கொண்டு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பெரியவர் என்று அர்த்தம்

ஏற்கனவே படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. படத்தின் பெயர், வியூகம், மன்னவன், அண்ணாத்த என தகவல்கள் பரவின. இந்நிலையில் படத்தின் பெயர் அண்ணாத்த என உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாத்த என்ற சொல் வழக்கில் உள்ளது. அண்ணாத்த என்றால் பெரியவர் என்றும் பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X