»   »  ராணுவத்துடன் ரஜினி மோதும் காட்சிகள்... டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படமாகிறது!

ராணுவத்துடன் ரஜினி மோதும் காட்சிகள்... டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படமாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த பிரமாண்ட படமான 2.ஓவின் முக்கிய காட்சி ஒன்றிற்காக டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார் இயக்குநர் ஷங்கர்.

ஷங்கர் மூன்றாவது முறையாக இங்கு தனது படப்பிடிப்பை நடத்துகிறார்.


2.ஓ படத்தில் ராணுவ வீரர்களுடன் ரஜினி மோதும் முக்கிய காட்சி இந்த மைதானத்தில் இடம்பெறுகிறது.


பெரோஷா கோட்லா

பெரோஷா கோட்லா

இதற்காக பல இடங்களைத் தேடிய ஷங்கருக்கு, கடைசியில் டெல்லி பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானம்தான் சரியாக அமைந்தது. இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த பெரும் முயற்சிக்குப் பிறகு அனுமதி பெற்றார் ஷங்கர்.
ரோபோ - அக்ஷயுடன் மோதல்

ரோபோ - அக்ஷயுடன் மோதல்

இங்கு ரோபாவுடனும், வில்லனாக நடிக்கும் அக்‌ஷய் குமாருடன் ரஜினி மோதும் பிரம்மாண்ட சண்டைக் காட்சியை படமாக்குறார். அதேபோல ராணுவத்துடன் ரஜினி மோதுவது போன்ற காட்சிகளும் படமாகின்றன.
மூன்றாவது முறை

மூன்றாவது முறை

இதற்கு முன் டெல்லி மைதானத்தில் தான் இயக்கிய ‘காதலன்', ‘பாய்ஸ்' படங்களின் படப்பிடிப்பை நடத்தினார் ஷங்கர்.


ரஜினி

ரஜினி

இந்த படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 25 நாட்களும் ரஜினியும் டெல்லியில் தங்கியிருப்பார்.


Read more about: shankar, rajini, ரஜினி
English summary
Rajinikanth's magnum opus 2.O shooting will be held at Delhi Feroz Shah Kotla Cricket Stadium in coming days.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil