»   »  முழுமையான 3 டி படமாக உருவாகிறது ரஜினியின் 2.ஓ! #2.O

முழுமையான 3 டி படமாக உருவாகிறது ரஜினியின் 2.ஓ! #2.O

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2. ஓ படம் முழுமையான 3 டி படமாக உருவாகிறது.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் 2.ஓ. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து வருகிறார். அக்ஷய் குமார் உள்ளிட்ட 3 வில்லன்கள் உள்ளனர்.

Rajini's 2.O will be a complete 3D movie

லைகா நிறுவனத் தயாரிப்பான 2.ஓவுக்கு இதுவரை 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. முக்கால்வாசிப் படம் முடிந்துள்ள நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை வெளியிடுவதில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர் ஷங்கர் அன்ட் டீம்.

2.ஓ குறித்து பெரிதும் வெளியில் தெரியாமல் உள்ள தகவல், அது முழுமையான 3 டி படமாக உருவாகியிருப்பதுதான். இந்தியாவில் இதுவரை தயாரான எந்தப் படத்துக்கும் செய்யாத அளவுக்கு 3டி வேலைகள் இந்தப் படத்துக்கு நடந்து வருகிறதாம்.

Rajini's 2.O will be a complete 3D movie

'2.ஓ வந்த பிறகு ஹாலிவுட் படம் மாதிரி என்ற ஒப்பீடெல்லாம் இருக்காது' என்கிறார்கள் இந்தப் படக்குழுவைச் சேர்ந்த சிலர்.

உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி!

Read more about: rajini, 3 d, ரஜினி, 3டி
English summary
Rajinikanth's 2.O will be a complete 3D movie and the production house is spending a lot for that technology.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil