ஐதராபாத்தில் நடக்கும் 'அண்ணாத்த' ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்.. வைரலாகும் மாஸ் போட்டோ!

By

சென்னை: அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் மாஸ் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

Superstar Annathe Shoot Begins | Aishwarya Dhanush, Nayanthara | Siruthai Shiva

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168 வது படம்.

இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இந்தப் படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம்சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்து விட்டது. மார்ச் மாதம் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைந்தது. இதனால், நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

அக்டோபர் மாதம் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், கொரோனா தாக்கம் குறைந்த பின் ஷூட்டிங் செல்ல முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வரும் 15 ஆம் தேதி அண்ணாத்த ஷூட்டிங் தொடங்கப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதை சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியது.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இயக்குனர் சிறுத்தை சிவா, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன வீடியோவை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டிருந்தது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் நேற்று ஐதராபாத்துக்குச் சென்றார்.

ஷூட்டிங்கில் ரஜினி

ஷூட்டிங்கில் ரஜினி

விமானத்தில் அவர் நிற்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிறன. அங்கு ஜனவரி 10 ஆம் தேதிவரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் மகளுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

செம ஸ்டைல்

செம ஸ்டைல்

இந்த போட்டோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர், செம ஸ்டைல்.. மாஸ்க் இல்லாமல் போஸ் கொடுத்திருக்கலாமே தலைவா என்று கூறியுள்ளனர். பலர், வயசானாலும் அப்படியே இருக்கீங்க என்றும் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X