For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரஜினியின் ‘பேட்ட’.... மரண மாஸ் வெளியாகி 3 வது ஆண்டு...'90-களின் ரஜினி' கொண்டாடிய ரசிகர்கள்

  |

  சென்னை ; ஜெயலலிதா, கருணாநிதி மரணத்திற்கு பின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவேன் என ரஜினி பகிரங்கமாக அறிவித்த நிலையில் அவரது அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு கூடியிருந்த நேரத்தில் பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்த அவரது 165 வது படம் தான் 'பேட்ட'. ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 1990- ஆம் ஆண்டு ரஜினிபோல் மரணமாஸ் காட்டினார் ரஜினி.

  தமிழக அரசியலில் இருபெரும் ஆளுமைகள் அடுத்தடுத்த காலக்கட்டத்தில் காலமான நிலையில் ஒரு குழப்பமான அரசியல் சூழலில் அதுவரை மவுனமாக இருந்த ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவேன் என நிச்சயமாக அறிவித்த நேரம். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிய நேரம். 2.0 வில் வேறு மாதிரியாகவும், காலாவில் வயதான தோற்றத்திலும் ரஜினி நடித்திருந்த நிலையில் பாட்சா படம் போல் ஃபிளாஷ் பேக்கில் இளமையான தோற்றத்துடன் ரஜினி நடித்து கலக்கிய படம் 'பேட்ட'.

  2 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினியின் தர்பார்...ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள் 2 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினியின் தர்பார்...ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்

  நடசத்திர பட்டாளத்துடன் மாஸ் காட்டிய ‘பேட்ட'

  நடசத்திர பட்டாளத்துடன் மாஸ் காட்டிய ‘பேட்ட'

  சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சி அமைத்த இந்தப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இளம் கதாநாயகர்களான விஜய் சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் கலக்கி இருந்தனர். காலா படத்தில் எப்படி நானாபடேகர் எப்படி வில்லத்தனத்தில் ரஜினிக்கு இணையாக கலக்கினாரோ அதே போல் இந்தப்படத்தில் அமைதியாக நவாசுத்தீன் சித்திக்கின் நடிப்பு ரஜினிக்கு இணையாக தனி ரகமாக அமைந்தது தனி சிறப்பு.

  டார்ஜிலிங்கில் செம என்ட்ரி சீன்

  டார்ஜிலிங்கில் செம என்ட்ரி சீன்

  டார்ஜிலிங்கில் ஒரு ஹாஸ்டலில் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க இரும்புக்கதவை திறந்து எண்ட்ரி ஆகும் ரஜினி, அதன் பின் தனது ஸ்டைலில் சண்டை, பின்னர் மாஸ் மரணம் சாங், அதில் எஸ்.பி.பியின் கந்தர்வக்குரல் என ரசிகர்களை கொண்டாட வைத்தது ரஜினியின் என்ட்ரி. இப்படத்திற்காக நுன்சாக்கூ எனும் ஆயுதத்தை ரஜினி பயன்படுத்த சிறப்பு பயிற்சி எடுத்தார் என்பது தனி கதை.

  செம்மையான ஃபிளாஷ்பேக்

  செம்மையான ஃபிளாஷ்பேக்

  டார்ஜிலிங், உ.பி என வெளிப்புற படபிடிப்பு நடத்தப்பட்டு அங்கு நடக்கும் சம்பவத்தின் ஃபிளாஷ்பேக்காக தமிழகத்தில் இளமையான அரிவாள் மீசை ரஜினியும், அவரது நண்பராக சசிகுமாரும் வரும் காட்சிகள் கலக்கலாக இருக்கும். பெற்ற தந்தையையே கொலை செய்து துள்ளல் ஆட்டம் போடும் வில்லனை நடனமாடியபடியே துப்பாக்கியால் கொலை செய்யும் ரஜினியும் பம்மியபடி தப்பியோடும் மற்றொரு வில்லன் நவாசுத்தீன் பின்னர் ரஜினியின் நண்பர் குடும்பத்தையும், ரஜினி குடும்பத்தையும் வடமாநில கும்பலுடன் சூறையாடும் பிளாஷ்பேக்கையும் ரஜினி வடமாநிலத்துக்கு வந்த நோக்கத்தையும் விவரிக்கும் காட்சிக்குப்பின் படம் சூடு பிடிக்கும்.

  வயோதிக காதல் சுவாரஸ்யம்

  வயோதிக காதல் சுவாரஸ்யம்

  நவாசுத்தீன் தந்தையாக வரும் மறைந்த இயக்குநர் மகேந்திரனும் இப்படத்தில் தனது முத்திரையை பதித்திருப்பார். டார்ஜிலிங் குட்டி தாதாவாக பாபி சிம்ஹா, வடமாநில தாதாவாக நவாசுத்தின் அவரது மகனாக விஜய் சேதுபதி என படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் கலக்க மறுபுறம் திரிஷா, முதன்முறையாக சிம்ரன் ரஜினியுடன் வயோதிக காதலில் கலக்கி இருப்பார்.

  கிளைமேக்ஸ் சுவாரஸ்யம்

  கிளைமேக்ஸ் சுவாரஸ்யம்

  இறுதியில் விஜய் சேதுபதியை தனது மகன் என நம்பவைத்து நவாசுத்தின் சித்திக் கதையை முடிக்கும் ரஜினி விஜய் சேதுபதியை தனது மகன் இல்லை என ஃபைனலி சொல்வார். விஜய் சேதுபதியை நோக்கி துப்பாக்கியை நீட்ட படம் முடிந்துவிடும். முடிவை வாசகர்கள் கருத்துக்கே விட்டுவிடுவார் டைரக்டர். மற்றப்படி டார்ஜிலிங்கில் மார்க்கெட்டில் ரஜினி போடும் சண்டை, சிம்ரனிடம் வழிவது என நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது.

  ஜனரஞ்சகமாக மாஸ் காட்டிய ‘பேட்ட'

  முழுதாக இளமையான ரஜினியாக வழக்கமான ஹேர்ஸ்டைலுடன் 'பாக்கத்தான போற இந்த காளையனோட ஆட்டத்த' கொல காண்டுல இருக்கேன் ஓடிடு என ரஜினியின் வசனங்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது, மொத்தத்தில் ரஜினியின் முக்கிய படங்களில் ஒன்றாக ஜனரஞ்சகமாக செம மாஸ் காட்டியது 'பேட்ட' எனலாம்.

  English summary
  Rajini's 'Betta' .... 3rd year after the release of Death Mass ... Fans celebrating Rajini in the 90s
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X