70 கேக் வெட்டி, 'ரஜினி ரெஸ்டாரன்ட்'டில் கொண்டாட்டம்... துபாய் ரசிகர்கள் ஹேப்பி!
Recommended Video
துபாய்: ரஜினியின் பிறந்தாளை முன்னிட்டு, துபாயில் உள்ள 'ரஜினிகாந்த் ரெஸ்டாரன்டி'ல் 70 கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
ரஜினிக்கு இன்று 70 வது பிறந்த நாள். ஆடம்பரக் கொண்டாட்டம் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், அவர் வேண்டுகோளின் படி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்த தானம், அன்னதானம் என கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆகியோரின் வாழ்த்து மழைகளில் திக்கு முக்காடுகிறது, சமூக வலைத்தளங்கள். #HappyBirthdayRajinikanth #HBDSuperstarRajinikant உட்பட 5 ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது ட்விட்டரில்.
ரஜினியின் பிறந்த நாளை, தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
துபாயில் உள்ள 'ரஜினிகாந்த் 24/7' ஹோட்டலில், ரஜினியின் 70 பிறந்த நாளை குறிக்கும் விதமாக, 70 கேக்குகள் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











