“நீ யார் மகன்னு தெரியுமில்ல.. ஜாக்கிரதையா இரு..” வைரலாகும் ரஜினியின் ‘மிரட்டலான’ வாழ்த்து வீடியோ!
சந்தோஷ் சிவன் மகன் பிறந்தநாளுக்கு ரஜினி வாழ்த்துக் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ரஜினி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் படம் தர்பார். இப்படத்திற்கு பிரபல கேமராமேன் சந்தோஷ்சிவன் தான் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

சந்தோஷ்சிவன் மகன் அப்புவுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அப்புவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பு. இப்போ நீ பதின்பருவத்தில் இருக்க. வாழ்க்கைய என்ஜாய் பண்ணு. அதேபோல படிப்பையும் என்ஜாய் பண்ணு. நீ யார் மகன்னு உனக்கு தெரியும். கவனமா இரு. உலகம் உன்ன பார்த்துட்டு இருக்கு", என ரஜினி சிரித்துக் கொண்டே வாழ்த்தியுள்ளார்.
ரஜினியின் இந்த வாழ்த்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











