Rajinikanth - ரஜினி ஓய்வு பெறுகிறாரா?.. அண்ணன் சத்யநாராயண ராவ் அளித்த விளக்கம் இதோ
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினியின் கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமா என்பது குறித்து அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். இதனையடுத்து அவர் கைதி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கலாம் என தெரிகிறது. கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி படம்தான் லோகேஷ் கனகராஜுக்கு மாஸ்டர், விக்ரம் போன்ற பெரிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. எனவே அதன் இரண்டாம் பாகத்தை கூடுதல் கவனத்துடன் இயக்க வேண்டுமென்பதில் லோகேஷ் தீவிர ஆர்வத்தோடு இருக்கிறார். ரசிகர்களும் கைதி 2வுக்காக வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.

ரஜினியுடன் இணையும் லோகேஷ்: இதற்கிடையே ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கவிருக்கிறார் என சில மாதங்களாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு அடுத்து ரஜினியை கமலும், லோகேஷும் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போதே ரஜினி - லோகேஷ் கூட்டணி உறுதியாகவிட்டதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அவர்கள் இணையும் படம் ஏதோ காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
தயாரிப்பாளர் யார்?: இப்போது இந்தக் கூட்டணி இணைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. படத்தை தயாரிக்க மொத்தம் ஏழு தயாரிப்பு நிறுவனங்கள் ரேஸில் இருக்கின்றன. இவற்றில் சன் பிக்சர்ஸுக்கோ இல்லை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோவுக்கோ அந்த வாய்ப்பு செல்லும் என தெரிகிறது. இதற்காக மிகப்பெரிய தொகையை லோகேஷ் கனகராஜும், ரஜினியும் சம்பளமாக பெறவிருக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

கடைசி படம்: இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம்தான் ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் தொடர்ந்து ஒரு செய்தி பரவிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் ரஜினிக்கு அது கடைசி படமாக இருக்காது என்றும் அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர். ஞானவேல் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு லோகேஷ் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினி அண்ணன்: இந்நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாகவிருக்கின்றன. அடுத்ததாக மூன்று படங்கள் வரவிருக்கின்றன. அவை அனைத்துமே நல்ல படங்கள்.

முருகன் அருளால் ரஜினிகாந்த் ஆரோக்கியமாக, சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. இனி வந்து பிரயோஜனம் இல்லை. அவர் யாருக்கும் ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை" என்றார்.
ரஜினியின் கண்டிஷன்?: இதற்கிடையே லோகேஷ் கனகராஜுக்கு ரஜினிகாந்த் ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல் வெளியானட்து. அதாவது, தனது கரியரில் பிரமாண்ட வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்றான பாட்ஷா படம்போல் இந்தப் படத்தை உருவாக்கி வெற்றியை கொடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் லோகேஷிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











