twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”: ரஜினி செய்த தரமான ஃபேன் பாய் சம்பவம்… கபாலி வெளியாகி 6 ஆண்டுகள்..

    |

    சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'கபாலி' வசூல் வேட்டை நடத்தியது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினியின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 'கபாலி' திரைப்படம்.

    சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினி தான் என்பது, தமிழ் சினிமா ரசிகர்களின் வாழ்நாள் சத்தியவாக்கு. ஸ்டைல்களின் மன்னாதி மன்னன் என ரஜினியை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். அதிலும், ரஜினியின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது, அதனை திருவிழாவாகவே மாற்றிவிடுவது ரஜினி ரசிகர்களின் வழக்கம். அப்படி அவர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட கமர்சியல் திருவிழா தான் 'கபாலி.'

    பணம், புகழ் இருந்தாலும் 10 சதவிகிதம் கூட நிம்மதி இல்லை.. வருத்தத்தில் ரஜினிகாந்த்! பணம், புகழ் இருந்தாலும் 10 சதவிகிதம் கூட நிம்மதி இல்லை.. வருத்தத்தில் ரஜினிகாந்த்!

    வெற்றியும் தோல்வியும்

    வெற்றியும் தோல்வியும்

    90களின் காலக்கட்டத்தில் தளபதி, அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்கள் ரஜினியின் ஃபேன் பாய் சம்பவங்களாக ஹிட் அடித்தன. அதன்பிறகு சில படங்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், 'படையப்பா', 'சந்திரமுகி' 'சிவாஜி' திரைப்படங்கள் வேறலெவலில் பட்டையைக் கிளப்பின. ஆனாலும், அதனையடுத்து வெளியான ரஜினியின் படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இந்த தோல்விகளில் விஸ்வரூபம் எடுக்க ரஜினிக்கு சரியான படமாக அமைந்தது 'கபாலி.'

    எதற்கும் துணிந்த ரஜினி

    எதற்கும் துணிந்த ரஜினி

    'கபாலி' படத்திற்கு முன்னர் வெளியான 'லிங்கா' ரஜினிக்கு மிகப் பெரிய தோல்வியைக் கொடுத்திருந்தது. இதனால், இந்த முறை இளம் இயக்குநருடன் கூட்டணி வைக்கலாம் என துணிந்து முடிவெடுத்த ரஜினி, 'அட்டக்கத்தி', ''மெட்ராஸ்' படங்கள் மூலம் கவனம்ஈர்த்த பா. ரஞ்சித் உடனும் இணைந்தார். முதலில் இந்தக் கூட்டணி மீது பெரிதாக நம்பிக்கையில்லை என்பதாக, சினிமா விமர்சகர்கள் கூறிவந்தனர்.

    சால்ட் & பெப்பர் லுக்

    சால்ட் & பெப்பர் லுக்

    ஆனால், 'கபாலி' வெளியானதும் நிலைமையே தலைகீழானது. ரஜினியின் சால்ட் & பெப்பர் லுக்கும் அந்த ஸ்டைலும், ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. "நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற ரஜினி பேசிய பஞ்ச் வசனத்தில் திரையரங்குகள் அதிர்ந்து தான் போயின. ஆக்சன் காட்சிகளிலும் மரண மாஸ் காட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    கேங்ஸ்டரின் காதல்

    கேங்ஸ்டரின் காதல்

    கபாலீஸ்வரன் என்ற கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடித்திருந்த ரஜினி, ஆக்சனில் பொளந்துக் கட்டினார் என்றால், ராதிகா ஆப்தே உடனான காதல் காட்சிகளில் கனிந்துருகி கலங்கடித்தார். தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை பின்னணியாகக் கொண்டு அரசியல் ப்ளஸ் கேங்ஸ்டர் படமாக உருவாகியிருந்தது

    விதவிதமா... ரகம்ரகமா...

    விதவிதமா... ரகம்ரகமா...

    ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுபோய் விட்டது 'கபாலி' திரைப்படம். ஸ்டைல், பஞ்ச் டயலாக்ஸ், ஆக்சன், காதல், செண்டிமெண்ட் என்று மட்டும் இல்லாமல், ரஜினியை லோக்கலாக லுங்கி, சட்டையிலும், செம்ம ஸ்டைலாக கோர்ட் சூட் காஸ்ட்யூமிலும் காட்டி மாஸ் காட்டினார் இயக்குநர் பா. ரஞ்சித். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் வசூலுக்கு வசூலும் ஆச்சு, ரஜினிக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட்டும் கொடுத்தாச்சு என்ற கணக்கில் சேர்ந்தது 'கபாலி.'

    English summary
    Rajini's classic fan boy incident: 6 years after the release of Kabali
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X