DarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்
ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். காமெடி வேடத்தில் யோகி பாபுவும், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸும் நடித்துள்ளனர்.
தர்பார் படத்தில் மும்பை போலீசாக ரஜினி நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ரஜினியின் போலீஸ் கெட்டப் தான் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் பேட்ட பட லுக்கில் ரஜினி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
அதோடு, பர்ஸ்ட் லுக்கிற்காக நடத்தப்பட்ட போட்டோஷூட் இணையத்தில் லீக்கானதால், கடைசி நேரத்தில் இந்த போஸ்டர் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதனை உறுதி செய்வது போல் அந்த போஸ்டரில் பல குறைகள் காணப்பட்டன.
செகண்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், ஓணம் பண்டிகையை ஒட்டி இன்று மாலை தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அப்படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா டிவிட்டரில் அறிவித்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேட்ட படத்தில் வரும் ‘போட்றா வெடியா' டயலாக்கை அவர்கள் பகிர்ந்து வந்தனர்.

வெளியானது செகண்ட் லுக்
இந்நிலையில் அறிவித்தப்படி சரியாக மாலை ஆறு மணிக்கு தர்பார் செகண்ட் லுக் போஸ்டரை லைகா வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி உள்பனியனுடன், ஒரு கம்பியை ஆக்ரோஷமாக பிடித்திருப்பது போல் உள்ளது. இந்த போஸ்டரை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செகண்ட்லுக் போஸ்டரை அவர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் டிசைன்
ஏற்கனவே ரஜினியின் இரண்டு ஹெச்.டி. போஸ்டர்களை முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அவற்றைக் கொண்டு ரசிகர்கள் சிறப்பான போஸ்டர்களை டிசைன் செய்ய வேண்டும் என்றும் ஒரு போட்டியை அவர் அறிவித்தார். அதன்படி ரசிகர்கள் பல்வேறு போஸ்டர்களை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











