தீபாவளிக்கு வராத ’லிங்கா’ பாட்டு.. சொல்லாமல் கொள்ளாமல் வந்த ’ஸ்டைலிஷ்’ போஸ்டர்கள்!
சென்னை: தீபாவளி வாழ்த்துக்களோடு நேற்று ரஜினி நடித்த லிங்கா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தில் ரஜினி தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். எனவே, இரு நாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடித்துள்ளனர்.
முதலில் இப்படத்தின் பாடல்கள் தீபாவளி அன்று வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், நேற்று பாடல்கள் வெளியாகவில்லை. எனவே, ரஜினி ரசிகர்கள் ஏமாந்து போகாமலிருக்க நேற்று அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.

ஸ்டைல்... ஸ்டைல்
இந்த போஸ்டரில் கோட் அணிந்த ஸ்டைலிஷான ரஜினி நடந்து வருவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் ஒரு அரண்மனை போன்ற ஒன்று உள்ளது.

இளமையான ரஜினி...
இளமையான தோற்றத்துடன் இப்படத்தில் நடித்துள்ளார் ரஜினி. இப்போஸ்டரில் ரஜினி ஆவேசமாக நடப்பது போன்று முகபாவனை உள்ளது.

எதிர்பார்ப்பு...
இப்புதிய போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் லிங்கா குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதலில் இப்படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளதாகக் கூறப்பட்டது.

பொங்கலுக்குத் தான்...
ஆனால், இன்னும் அப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்க வேண்டி இருப்பதால், லிங்கா பொங்கலுக்குத் தான் என தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications











