எந்திரன் 2.. பட்ஜெட் ரூ 250 கோடி... சூப்பர் ஸ்டார் - ஷங்கர் - ரிலையன்ஸ் கைகோர்க்கிறார்கள்?
சென்னை: லிங்கா படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் பாதியைத் தாண்டியிருக்கிறது. ஆனால் அதற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்துக்கான திட்டமிடல், முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன.
லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருப்பது ஷங்கர் இயக்கத்தில்தான் என்பது உறுதியாகிவிட்டது. இதனை ஏற்கெனவே ஒன்இந்தியா தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்தியன் தாத்தாவும்
இந்தப் படம் எந்திரனின் தொடர்ச்சிதான் என்பது உறுதியாகியுள்ளது. கூடவே, இந்தியன் தாத்தா மாதிரி ஒரு கேரக்டர் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்கள். இதுவரை தன் கேரியரில் இல்லாத பிரமாண்ட படமாக இந்தப் படம் அமைய வேண்டும் என்பதில் ரஜினி ஆர்வமாக உள்ளாராம்.

ரூ 250 கோடி
இந்தப் படத்துக்கு பட்ஜெட் தோராயமாக ரூ 250 கோடி என ஷங்கர் சொன்னதுமே, ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிப்பதாகக் கூறிவந்த கல்பாத்தி அகோரம் பின்வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் ஷங்கருக்கும் கல்பாத்தி அகோரத்துக்கும் சரிப்பட்டு வரவில்லை என்கிறார்கள்.

ரிலையன்ஸ்
இதைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸையே தயாரிக்கச் சொல்வதா.. அல்லது வெளியில் வேறு தயாரிப்பாளரைத் தேடுவதா என்ற யோசனையின் முடிவில், ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் இந்த மெகா பட்ஜெட் படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆசியாவிலேயே
இப்போதைய நிலவரப்படி, இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டில் தயாரித்தால், இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் முதல் படம் எந்திரன் -2 ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள்!


Click it and Unblock the Notifications











