ட்விட்டரில் ரஜினியை ஃபாலோ செய்பவர்களுக்கு கோச்சடையான் போஸ்டர் பரிசு
சென்னை: ட்விட்டரில் ரஜினிகாந்தை பின்தொடர்பவர்களுக்கு கோச்சடையான் டிஜிட்டல் போஸ்டர் அனுப்பி வைக்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ட்விட்டரில் இணைந்துள்ளார். அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ட்விட்டரில் ரஜினியை பின்தொடர்பவர்களுக்கு ஒரு பரிசும் கிடைக்கிறது.

கோச்சடையான் போஸ்டர்
ரசிகர் குடும்பத்தில் பங்கேற்பதற்காக நன்றி. இதோ உங்களுக்காக ஒரு கோச்சடையான் போஸ்டர் என்று ஆட்டமேட்டிக்காக ரஜினியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் வருகிறது. அத்துடன் ஒரு போஸ்டரும் வருகிறது.

போஸ்டர்கள்
ரஜினியின் கணக்கில் இருந்து கோச்சடையான் போஸ்டர் வருவது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விளம்பரம்
கோச்சடையான் படத்தை விளம்பரப்படுத்த இவ்வாறு செய்யப்படுவதாக சிலர் குறை கூறியுள்ளனர்.

பலவகை
பலவகையான கோச்சடையான் ஸ்டில்கள் அடங்கிய போஸ்டர்கள் கிடைப்பதில் பலர் மகிழ்ச்சியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











