twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி தயக்கம், கமல் முடக்கம்..எம்ஜிஆருக்கு பின் சாதித்த விஜயகாந்த்

    |

    மண்ணின் மைந்தன், வெள்ளந்தி மனிதர், அதிரடி ஹீரோ என மக்களால் பாராட்டப்பட்ட விஜயகாந்த் சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்தார்.

    Recommended Video

    Viayakanth நல்லா தான் இருக்கிறார்... ஊடகங்களுக்கு Premalatha Vijayakanth வேண்டுகோள் *Politics

    தமிழ் திரையுலகில் கமல், ரஜினி என இரண்டு பெரிய ஹீரோக்கள் இருந்தாலும், திரையுலகினர் பிரச்சினையில் இறங்கி ஆளுமையுடன் செயல்பட்டவர் விஜயகாந்த்.

    இது அவர் பின் நாளில் அரசியலில் கால்பதிக்க உதவியது, அவரது ஆளுமையை மக்களும் ஏற்றனர்.

    போராடி வெற்றிப் பெற்றவர்.. விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்துக்களை பகிர்ந்த சரத்குமார்! போராடி வெற்றிப் பெற்றவர்.. விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்துக்களை பகிர்ந்த சரத்குமார்!

    மக்கள் சேவையில் உயர்ந்த விஜயகாந்த்

    மக்கள் சேவையில் உயர்ந்த விஜயகாந்த்

    தமிழில் முன்னணி நடிகராக இருந்தபோதே மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் விஜயகாந்த். தனது மன்றங்கள் மூலம் நற்பணிகளை செய்தவர் பின் நாளில் அதன் மூலம் அரசியல் கட்சியையும் தொடங்கினார். தமிழக அரசியல் களத்தில் அதிமுக , திமுகவுக்கு அடுத்த இடத்தில் குறுகிய காலத்தில் தாம் உருவாக்கிய தேமுதிக கட்சியை நிலை நிறுத்தியவர் விஜயகாந்த். தொண்டர்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் தனது உடல் நிலைக்காரணமாக ஓய்வில் உள்ளார்.

     காமராஜருக்கு பின் வெள்ளந்தியான அரசியல் தலைவர்

    காமராஜருக்கு பின் வெள்ளந்தியான அரசியல் தலைவர்

    தமிழகத்தில் முக்கிய பிரச்சனைகளில் விஜய்காந்தின் அணுகுமுறை வித்யாசமாக இருக்கும் , தமிழகத்தின் முக்கிய மூத்த தலைவர்களுக்கு இணையாக முதிர்ச்சியுடன் சிந்தித்தவர் விஜயகாந்த் என்று அப்போது அரசியல் நோக்கர்கள் கூறுவர். தமிழக அரசியலில் காமராஜருக்கு அடுத்து வெள்ளந்தியான தலைவர் என்று விஜயகாந்தை பலரும் கூறுவதுண்டு. மனதில் பட்டதை கூறுபவர் அதனாலேயே அனைவராலும் கவனிக்கப்பட்டவர். சினிமாத்துறையிலும் நடிகர் சங்கத்தின் தலைவராக கடனை அடைத்த தலைவர் என்கிற ஆளுமை விஜயகாந்திற்கு மட்டுமே உண்டு.

    முக்கிய கட்சிகளை மண்ணைக்கவ்வ வைத்த விஜயகாந்த்

    முக்கிய கட்சிகளை மண்ணைக்கவ்வ வைத்த விஜயகாந்த்

    தனது மன்றங்கள் மூலம் மக்கள் பணியை செய்தவர் ஆங்காங்கே அந்த மக்கள் பணியால் உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் கால்பதிக்க 2005 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் குதித்த விஜய்காந்த் தேமுதிகவை துவக்கினார். வித்யாசமான பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது. ஒராண்டு அனல் பறக்கும் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமான வாக்கை பெற்றதன் மூலம் தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தினார்.

    எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த்

    எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த்

    ஒரே ஒரு எம்.எல்.ஏவாக சட்டபேரவையில் சிறப்பாக செயல்பட்டார். அடுத்த சட்டபேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றதன் மூலம் எதிர்க்கட்சித்தலைவரானார். எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் சினிமா செல்வாக்கால் அதிமுகவை தொடங்கி அதன் பின்னர் ஆட்சியையும் பிடித்தார். அவரைப்போலவே சினிமா செல்வாக்கால் தனியொரு மனிதனாக தனது செல்வாக்கை மட்டுமே நம்பி அரசியல் கட்சியை ஆரம்பித்து குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராகவும் ஆனவர் விஜயகாந்த். அவர் நினைத்திருந்தால் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக சென்று பல காரியங்களை சாதித்திருக்க முடியும், ஆனால் பஸ் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பியதில் முதல்வருடன் ஏற்பட்ட மோதலால் கூட்டணி முறிந்தது.

    கமலால் ஓரளவு முடிந்தது, ரைனி சிந்திக்கவே இல்லை

    கமலால் ஓரளவு முடிந்தது, ரைனி சிந்திக்கவே இல்லை

    எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் உதறினார். மக்களை சந்தித்து பார்த்துக்கொள்கிறேன் என முடிவெடுத்தார். ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குகிறேன் என 90 களின் இறுதிகள் முதல் சொல்லி வந்தவர் கடைசிவரை ஆரம்பிக்கவே இல்லை. கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து சரியான நிலைப்பாடு இல்லாமல் ஆரம்பத்திலேயே படுதோல்வியை சந்தித்து அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. விஜயகாந்தால் மட்டுமே அது முடிந்தது. ஆனால் இயற்கை ஒத்துழைக்கவில்லை. அவரது உடல் நிலை அவரை முடக்கி போட்டது. அதனால் அவரது கட்சியினர் சரியான முடிவெடுக்க முடியாமல் அரசியலில் துடுப்பில்லாத படகானது தேமுதிக. விஜயகாந்த் உடல் நலன் பாதித்து முடங்கியது தமிழ் திரையுலகிற்கும், அரசியலுக்கும் இழப்பு என்றே சொல்லலாம். தைரியமான மனிதர் விஜயகாந்த் உடல் நலன் சரியாகி மீண்டு வரவேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது.

    English summary
    Although there are two big heroes in the Tamil film industry namely Kamal and Rajini, it was Vijayakanth who got into the problems of the film industry and acted with personality.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X