ஒரிஜினல் போஸ்டருக்கே டஃப் கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்.. வெறித்தனமாக டிரெண்டிங்கில் ஜெயிலர் போஸ்டர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

'ஜெயிலர்' படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து, ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆனால், படக்குழு வெளியிட்ட போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் பயங்கரமாக டஃப் கொடுத்து வருகின்றனர்.

நெல்சனுடன் கூட்டணி வைத்த ரஜினி

நெல்சனுடன் கூட்டணி வைத்த ரஜினி

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான 'அண்ணாத்த' படத்தை, சிவா இயக்கியிருந்தார். ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது. ஆனால், 'அண்ணாத்த' படத்திற்கு எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து இளம் இயக்குநரான நெல்சனுடன் கூட்டணி வைத்தார் ரஜினி.

நெல்சன் மீது வைத்த நம்பிக்கை

நெல்சன் மீது வைத்த நம்பிக்கை

விஜய் தொலைக்காட்சியில் இருந்து திரைப்பட இயக்குநராக அறிமுகமான நெல்சனின் முதல் படம் 'கோலமாவு கோகிலா', பலரையும் கவனிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து நெல்சன் இயக்கிய 'டாக்டர்' திரைப்படம், காமெடியில் தரமான சம்பவம் செய்ததோடு, 100 கோடி வசூலிலும் இணைந்தது. ஆனால், அதன் பிறகு விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்', மோசமான விமர்சனங்களைப் பெற்றது. நெல்சனின் மேக்கிங் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், இதை மீறி நெல்சன் மீது ரஜினி நம்பிக்கை வைத்து 'ஜெயிலர்' படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தொடங்கியது ஜெயிலர் ஷூட்டிங்

தொடங்கியது ஜெயிலர் ஷூட்டிங்

ஜெயிலர் படத்தில் அனிருத் மட்டுமே இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். ரஜினியுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், தமன்னா ஆகியோர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே 'பீஸ்ட்' ஏமாற்றம் ஆனதால் 'ஜெயிலர்' படத்தின் கதையை ரொம்பவே பொறுமையாக செதுக்கியுள்ளார் நெல்சன். இதனையடுத்து இப்படத்தின் சூட்டிங் இன்று சென்னையில் தொடங்கியது.

அதகளம் செய்யும் ரசிகர்கள்

அதகளம் செய்யும் ரசிகர்கள்

ஜெயிலர் சூட்டிங் இன்று தொடங்கியதை அடுத்து, ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வயதான தோற்றத்தில் கண்ணாடி அணிந்தபடி சால்ட் & பெப்பர் லுக்கில் ரஜினி நடந்து வரும் இந்த போஸ்டர், இணையத்தில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது. ஆனால், ரஜினியின் ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர்களை உருவாக்கி அதகளம் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுடன் ரஜினி

சிவகார்த்திகேயனுடன் ரஜினி

ஒரு போஸ்டரில் சிறையின் உள்ளே ரஜினி பெரிய அரிவாளோடு ஸ்டைலாக நிற்பதை போன்றும், இன்னொன்றில் இன்னும் மாஸாக என்ட்ரி கொடுப்பதை போலவும் டிசைன் செய்துள்ளனர். அதேபோல் இன்னொரு போஸ்டரில் ரஜினியின் பின்னால் டாக்டர் படத்தின் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருக்கும் போஸ்டரையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த போஸ்டர்கள் அனைத்தும் 'ஜெயிலர்' படக்குழு வெளியிட்ட ஒரிஜினலுக்கு டஃப் கொடுக்கும் வகையில், தீயாகப் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X