ஒரே நாளில் களமிறங்குகிறார்களா ரஜினியும், கமலும்?.. தீயாய் பரவும் தகவல்

சென்னை: ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படமும், கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படமும் ஒரே நாளில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும். இருவரும் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் ஒன்றாகவே நடித்துவந்தனர். ஒருகட்டத்தில் சேர்ந்து நடித்தால் வளர முடியாது என்று முடிவெடுத்த இரண்டு பேரும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். அதனையடுத்து இருவருமே உச்சத்திற்கு சென்றனர். தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திலும், கமல் ஹாசன் இந்தியன் 2 படத்திலும் நடித்துவருகின்றனர்.

நெல்சனுடன் இணைந்த ரஜினிகாந்த்

நெல்சனுடன் இணைந்த ரஜினிகாந்த்

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் கொடுத்த தோல்விக்கு பிறகு சுதாரித்துக்கொண்ட ரஜினி உடனடியாக ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். எனவே இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் அவர் இணைந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

விக்ரம் படம் கமலுக்கு கொடுத்த உற்சாகம்

விக்ரம் படம் கமலுக்கு கொடுத்த உற்சாகம்

அரசியல் கட்சி ஆரம்பித்ததும் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கமல் ஹாசன்; லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. இதனால் உற்சாகம் ஆன கமல் ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார்.

இந்தியன் 2வில் கமிட்டான கமல் ஹாசன்

இந்தியன் 2வில் கமிட்டான கமல் ஹாசன்

அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி நிறுத்தபப்ட்டிருந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதன் ஷூட்டிங்கில் கமல் ஹாசன் மும்முரமாக கலந்துகொண்டிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

ஜெயிலரும், இந்தியன் 2வும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா?

ஜெயிலரும், இந்தியன் 2வும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா?

இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்தும், இந்தியன் 2 படம் குறித்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்தையும், கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒரேநாளில் இருவரது படங்களும் ரிலீஸாகும்பட்சத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் ஒன்றாக ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் விஜய் நடித்த வாரிசும், அஜித் நடித்த துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸாகின. தற்போது மூத்த நடிகர்களான ரஜினியும், கமலும் ஒரே நாளில் களமிறங்கப்போவதாக வெளியாகியிருக்கும் தகவலால் யார் பலம் பொருந்தியவர் என்பதை பார்க்க ஆவலோடு இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X