கர்நாடகாவில் நடைபெறும் ரஜினி பட சூட்டிங்.. எங்க நடக்குது தெரியுமா.. பார்க்கலாம் வாங்க!

சென்னை : நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னையின் பிரபல ஸ்டூடியோசில் நடைபெற்றது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் நிலையில், படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

இந்தப் படத்தில் மாறுபட்ட கேரக்டரில் ரஜினி நடித்து வருவதாக தெரிகிறது. படத்தை அடுத்த ஆண்டில் வெளியிட தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது.

ரஜினியின் அண்ணாத்த படம்

ரஜினியின் அண்ணாத்த படம்

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு கடந்த ஜனவரி மாதத்தில் வெளியானது. இந்தப் படத்தில் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார். நயன்தாரா ஜோடியாக நடித்திருந்த நிலையில், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

ரஜினியின் ஜெயிலர்

ரஜினியின் ஜெயிலர்

இந்தப் படத்தை தொடர்ந்து சில மாதங்கள் ஓய்வில் இருந்த ரஜினியின் அடுத்தப் படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துவரும் நிலையில், பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படத்தில் நெல்சன் திலீப்குமார் கமிட்டானார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

இதனிடையே பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்னங்களையே பெற்றது. இதையடுதது ரஜினியை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடியே நெல்சன் ரஜினியின் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை துவக்கி தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். வித்தியாசமான கேரக்டரில் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது.

சென்னையில் சூட்டிங்

சென்னையில் சூட்டிங்

முன்னதாக சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இந்தப் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பெரும்பாலான படங்கள் கர்நாடகாவில் பெரும்பாலும் எடுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவரது லிங்கா படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து அங்கு படப்பிடிப்புகள் எதுவும்
எடுக்கப்படவில்லை. சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களிலேயே நடைபெற்றன.

மங்களூர் சிறையில் சூட்டிங்

மங்களூர் சிறையில் சூட்டிங்

இதனிடையே தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங் கர்நாடகாவின் மங்களூரில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மங்களூரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளன. மேலும் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துவரும் சூழலில் மங்களூரில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலங்களுக்கு பிறகு கர்நாடகாவில் சூட்டிங்

நீண்ட காலங்களுக்கு பிறகு கர்நாடகாவில் சூட்டிங்

80 மற்றும் 90 காலகட்டங்களில் ரஜினியின் பெரும்பாலான படங்கள் கர்நாடகாவில் நடைபெறுவது நடைமுறையில் இருந்தது. இதுகுறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் அதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கர்நாடகாவில் ரஜினி படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X