»   »  கபாலி... இந்த டிசைன் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா!!

கபாலி... இந்த டிசைன் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படம் தொடங்குவதற்கு முன்பே ஒரு விஷயத்தில் புதிய சாதனைப் படைத்துவிட்டது. அது, அந்தப் படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய விதவிதமான டிசைன்கள் மூலம்!

மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற செய்தி கசிய ஆரம்பித்ததிலிருந்தே ரசிகர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக இணையத்தில் சதா இயங்கி வரும் ரசிகர்கள், படத்தின் தலைப்பு தெரியும் முன்பே வித விதமான டிசைன்களை உருவாக்கி வெளியிட்டு அசத்தினார்கள்.

படத்துக்கு தலைப்பு கபாலி என்பது உறுதியானதும், இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு நாளுமொரு புதிய டிசைன்களை உருவாக்கி வருகின்றனர்.

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டிசைன்களில், கபாலி புது சாதனையே படைத்துவிட்டது என்றால் மிகையல்ல. அத்தனை டிசைன்கள்.. எல்லாமே ரஜினி தாடி மற்றும் நரைத்த முடியுடன் இருப்பதைப் போல.

ரஜினியும் இயக்குநர் ரஞ்சித்தும் தயாரிப்பாளர் தாணுவும் வியந்துபோகும் அளவுக்கு ரசிகர்களின் கற்பனை அமைந்திருந்தது.

எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய், ரஜினியின் தோற்றம் அந்தப் படத்தில் எப்படி இருக்கும் என்பதை பிரபல ஓவியர் ஒருவரை வைத்து வரைந்து வெளியிட்டனர். அந்த ஓவியமும் சிறப்பாகவே வந்திருந்தது.

இதோ.. ரசிகர்கள் உருவாக்கிய டிசைன்களிலிருந்து சில...!

கபாலி 1

கபாலி 1

கபாலி என்ற தலைப்பு அறிவிக்கப்பட்ட உடன் ரசிகர் ஒருவர் வெளியிட்ட முதல் டிசைன் இதுதான்.

கபாலி 2

கபாலி 2

கங்குவா இந்திப் படத்தில் வந்த ரஜினியின் இந்த ஆக்ஷன் ஸ்டில்லை வைத்து உருவாக்கப்பட்ட அடுத்த டிசைன்.

கபாலி 3

கபாலி 3

ரஜினியின் நிகழ்கால உருவத்தை கிராபிக்ஸ் செய்து உருவாக்கப்பட்ட புது டிசைன்.

கபாலி 4

கபாலி 4

ரஜினியின் இன்றைய தோற்றத்தை வைத்து, பாதி முகம் மட்டும் தெரியுமளவுக்கு உருவாக்கப்பட்ட அடுத்த போஸ்டர்.

கபாலி 5

கபாலி 5

ரஜினியின் தாடி, மீசை ப்ளஸ் புகையும் சுருட்டு... கபாலி ரஜினி ரெடி!

கபாலி 6

கபாலி 6

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினியின் இயல்பான தோற்றம் இது. கையில் புகையும் சிகரெட், நெற்றியில் குங்குமம்... இது ரசிகர்கள் கைவண்ணம்!

கபாலி 7

கபாலி 7

பின்னணியில் அலைகடலென நிற்கும் மக்கள் வெள்ளம்... ஏகாந்தியாய் கபாலி!

கபாலி 8

கபாலி 8

ரஜினி இப்போது இருக்கும் தோற்றத்தை அப்படியே கிராபிக்ஸில் வரைந்து புதிய டிசைனாக்கியிருக்கிறார்கள்.

கபாலி 9

கபாலி 9

ரஜினி இந்தப் படத்துக்காக வைத்திருக்கும் தாடியை மனதில் கொண்டு இந்த டிசைனை உருவாக்கியுள்ளனர். கிட்டத்தட்ட கபாலி லுக் இதுதான் என்கிறார்கள்!

கபாலி 10

கபாலி 10

சிவாஜி வெள்ளிவிழாவில் பங்கேற்ற ரஜினியின் புகைப்படத்தில், கொஞ்சம் முடியை மட்டும் கூடுதலாக்கியிருக்கிறார்கள். செம கெட்டப் இது!

கபாலி 11

கபாலி 11

ரசிகர்கள் உருவாக்கியதில் கவர்ந்த இன்னொரு டிசைன் இது. எக்ஸ்ட்ராவாக ஒன்றும் கிடையாது. அதே முடி, அதே வழுக்கை, அதே தாடி... கைகளிலும் கழுத்திலும் கொஞ்சம் நகைகள். கபாலி தாதா பராக்!

கபாலி 12

கபாலி 12

சிவாஜியில் சுமனை எச்சரிக்கும் ரஜினியின் அந்த ஸ்டில்லை வைத்து இப்படி ஒரு கபாலி டிசைன்

கபாலி ஓவியம்

கபாலி ஓவியம்

இதுதான் ரசிகர்களின் கற்பனையின் சிகரம். கிட்டத்தட்ட இதுதான் ரஜினியின் கபாலி கெட்டப் எனலாம். ஒரு ஓவியரை வைத்து வரையப்பட்டது!

English summary
Here are few designs of Rajinikanth's look in Kabali movie made by his die hard fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos