ரஜினியின் கோச்சடையான்- ஒரு முன்னோட்டம்

By Shankar

கோச்சடையான் பொங்கலுக்கு வருகிறது.... இல்லையில்லை, ஜனவரி 26-க்கு வருகிறது... அட அதெல்லாம் இல்லப்பா, ஏப்ரல் 14 கன்பர்ம்...

-இப்படி இணையங்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமான யூகங்கள் கோச்சடையான் வெளியீடு குறித்து.

ஆனால் ஆதாரப்பூர்வமாக தெரிய வந்தது, யார் படத்துக்கும் பாதிப்பு இல்லாத தேதியாதப் பார்த்து, பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் படத்தை வெளியிடுங்கள் என ரஜினி சொன்னதுதான்.

இந்த நிலையில், இந்திய சினிமா சரித்திரத்தில் முக்கிய இடம்பெறவிருக்கும் வரலாற்றுப் படமான கோச்சடையான் குறித்த ஒரு விரிவான முன்னோட்டம்...

யார் கோச்சடையான்?

யார் கோச்சடையான்?

'கோச்சடையான்' தென் தமிழகத்தை ஆண்ட சங்க கால தமிழ் மன்னன். அவரது மகன் ராணா. அப்பா வீராதி வீரர்... மகன் ராணாவோ, வீரமும், நடனமும் கைவரப் பெற்றவன்.

மராட்டியம் வரை

மராட்டியம் வரை

தமிழ் மன்னன் கோச்சடையானின் ஆதிக்கம் அன்றைக்கு மராட்டியம் வரை பரவியிருந்தது. அவரது மேலாட்சியை ஏற்று மற்ற நாட்டு மன்னர்கள் கப்பம் செலுத்தி வந்தனர். இந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில் பகைவர்களுடன் நடந்த போர்களும், மன்னர் குடும்பத்துக்குள் நடந்த பாசப் போராட்டங்களையும் மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இருவேடங்கள்

இருவேடங்கள்

இந்தப் படத்தில் தந்தை கோச்சடையான் & மகன் ராணா என இரு வேடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ளார். பொதுவாகவே இரட்டை அல்லது மூன்று வேடங்கள் கொண்ட கதைகளி ஊதித் தள்ளிவிடுபவர் ரஜினி.

கோச்சடையான் ஆதிக்கம்

கோச்சடையான் ஆதிக்கம்

படத்தில் ராணாவின் வீரதீர சாகஸங்கள் இருக்கும் என்றாலும், படம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் பாத்திரம் தந்தை கோச்சடையானுடையது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்கே சென்று 'கோச்சடையான்' மீட்கும் காட்சி அரங்குகளை அதிரவைக்கும் என்கிறார்கள்.

ராணாவின் ஆக்ஷன் ஆட்டம்

ராணாவின் ஆக்ஷன் ஆட்டம்

இரண்டாம் பாதியில் ராணாவின் ஆக்ஷன் ஆட்டம் இதுவரை எந்தப் படத்திலும் பார்க்காத அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளதாம்.

தீபிகா

தீபிகா

'கோச்சடையான்' ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே, ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி, கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி, வில்லனாக ஜாக்கி ஷெராப், ராஜகுருவாக நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

சிவபெருமானின் ருத்ர தாண்டவ நடன அடிப்படையில் ரஜினி - தீபிகா ஆடும் நடனத்தை இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாகக் கூறுகிறார்கள். இந்த நடனத்துக்காக பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டார் தீபிகா. ரஜினி ஆன்தி ஸ்பாட்டில் ரிகர்சல் பார்த்ததோடு சரி.ஷோபனாவுக்கும் இந்தப் படத்தில் நடனக்காட்சி உண்டு.

ரஹ்மான் இசையில் ரஜினி பாட்டு

ரஹ்மான் இசையில் ரஜினி பாட்டு

படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான். இந்தப் படத்தின் சிறப்புகளில் முக்கியமானது ரஜினி தன் சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல். "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்தப் பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், இந்தியில் ரஜினியே பாடியுள்ளார்.

நீத்தா லுல்லா

நீத்தா லுல்லா

படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ரஜினி டப்பிங்

ரஜினி டப்பிங்

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே ரஜினிதான் டப்பிங் பேசியிருக்கிறார். படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இன்டர்வெல் கிடையாது.

அனிமேஷன் இல்லை

அனிமேஷன் இல்லை

படத்தின் பாத்திரங்கள் அனைத்தும் நிஜ மனிதர்களின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது நிஜ மனிதர்களின் அசல் பிம்பங்கள், மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்டுள்ளனர். அனிமேஷனுக்கு அடுத்த கட்ட டெக்னாலஜி இது.

3 டியிலும்

3 டியிலும்

படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் 3 டி பணிகள் நடந்தன.

4000 அரங்குகள்...

4000 அரங்குகள்...

உலகம் முழுவதும் 4000 அரங்குகளில் கோச்சடையானை ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஜப்பானில் மட்டும் 1000 ம் அதிகமான அரங்குகளில் கோச்சடையானை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X