ரஜினிக்கு இல்லாத தைரியம் ஜி.வி. பிரகாஷுக்கு இருக்கு
Recommended Video

சென்னை: பெண்களின் பாதுகாப்பு, உஷா-அஸ்வினி விவகாரம் பற்றி கேட்டதற்கு ரஜினிகாந்த் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ளனர். தங்களின் படம் குறித்தும், நிஜ வாழ்க்கை குறித்தும் போஸ்ட் போடுகிறார்கள்.
புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் உள்ளனர். அப்படி கண்ணில் பட்டு கவனத்தை ஈர்த்த சில பிரபலங்களின் லேட்டஸ்ட் ட்வீட்.
குளிர்
பார்க்கும் இடம் எல்லாம் பனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜிம்முக்கு போக வேண்டுமா என்ற யோசனையில் இருப்பதாக ட்வீட்டியுள்ளார் காஜல் அகர்வால்.
ஸ்பைடர் மேன்
குழந்தைகளுக்காக நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டியிருக்கிறது என்று கூறி தான் ஸ்பைடர்மேனாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.
ஐஸ்
சிட்டுக்குருவி மற்றும் ஜஸுடன் என்று கூறி மெர்சல் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் அட்லீ.
தேதி
உணவுப் பொருளின் புகைப்படத்தை வெளியிட்டு என்னங்கடா எக்ஸ்பயரி டேட் இது என்று கேட்டுள்ளார் நடிகர் சதீஷ்.
தவளை
என்னங்கடா இது முத்தம் கொடுத்தும் தவளை இளவரசனாக மாறவில்லை என்று கேட்கிறார் சன்னி லியோன்.
அஸ்வினி
காதல் எனும் பேரில் நடைபெற்ற கொடூர செயல்... விசாரணை என்ற பெயரில் தண்டனைகள் தாமதப்படுவது குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகுவதோடு பெண்ணினத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி போகிறது...#ripashwini என ட்வீட்டியுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.


Click it and Unblock the Notifications











