வெளியானது லிங்கா முதல் போஸ்டர்.. ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி!
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி - சோனாக்ஷி சின்ஹா - அனுஷ்கா நடித்து வரும் படம் லிங்கா. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் மட்டுமே இதுவரை வெளியாகி வந்தன. வேறு படங்கள் எதையும் வெளியிடாமல் ரகசியம் காத்தது லிங்கா குழு.

முதல் போஸ்டர்
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லிங்கா படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இளமை ரஜினி
இதில் குளிர் கண்ணாடி அணிந்து, மிக இளமையான தோற்றத்தில் ரஜினி ஸ்டைலாக நிற்கிறார். லிங்கா படத்தின் தலைப்பு டிசைனும் நேற்றுதான் முதல் முறையாக வெளியாகியிருந்தது.

ரசிகர்கள்
இந்த போஸ்டரும் ரஜினியின் தோற்றமும் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. அந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர் ரசிகர்கள்.

பட்டாசு வெடித்து
வெளியூர்களில் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரஜினி போஸ்டர் ரிலீசைக் கொண்டாடினர்.


Click it and Unblock the Notifications











