ஆமீர்கான் படத்தை முந்திய ரஜினியின் லிங்கா!

By Shankar

ஆமீர்கானின் பிகே படத்தை விட அதிக அரங்குகளில் வெளியாகிறது ரஜினியின் லிங்கா படம்.

லிங்கா திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 650 அரங்குகளில் வெளியாகிறது. ஆந்திரா - தெலங்கானாவில் 1400 அரங்குகளிலும், கர்நாடகத்தில் 150 மற்றும் கேரளத்தில் 150 அரங்குகளிலும் வெளியாகிறது. மும்பையில் மட்டும் 100 திரைகளில் இந்தப் படம் தமிழ் - இந்தியில் வெளியாகிறது. இதர பகுதிகளில் 500முதல் 600 அரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் 3000 அரங்குகளைக் குறிவைத்துள்ளனர் படத்தை வெளியிடும் அய்ங்கரன் நிறுவனத்தினர். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஆக மொத்தம் 5500-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியாகிறது.

ஆனால் ஆமீர்கானின் இந்திப் படம் பிகே 4000 அரங்குகளில்தான் வெளியாகிறது. இவற்றில் 1000 அரங்குகள் வெளிநாடுகளில் உள்ளவை. இந்தியாவில் 3000 அரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை ராஜு ஹிராணி இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X