twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னடர்கள் எதிர்ப்பால் ஹைதராபாத்துக்கு மாறுகிறது லிங்கா ஷூட்டிங்?

    By Shankar
    |

    மைசூர்: கன்னடர்கள் எதிர்ப்பால் ரஜினி நடிக்கும் 'லிங்கா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்துக்கு மாற்றப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் இதனை லிங்கா குழு மறுத்துள்ளது.

    'கோச்சடையான்' படத்தை தொடர்ந்து 'லிங்கா' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. நாயகிகளாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

    ரஜினி - சோனாக்ஷி

    ரஜினி - சோனாக்ஷி

    இந்தப் படப்பிடிப்பு கடந்த 2 - ந்தேதி மைசூரில் துவங்கியது. ரஜினி, சோனாக்சி சின்ஹா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. சோனாக்ஷியின் பகுதி முடிந்துவிட்டதால், அவர் மும்பை திரும்பிவிட்டார்.

    40 நாட்கள்

    40 நாட்கள்

    ரஜினிக்குப் பிடித்த இடம் மைசூர். எனவே மைசூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மைசூர் அரண்மனையிலும் பெரும் பகுதி காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். மைசூரில் மட்டும் 40 நாட்கள் படப்பிடிப்பு என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    ஆனால் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. மைசூரிலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி செயல்பட்டதாக கண்டித்து கன்னடர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் போராட்டம் நடத்தினர்.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    இதனால் ரஜினிக்கும் படக்குழுவினருக்கும் அதிக போலீஸ் பாதுகாப்பு தந்திருந்தது கர்நாடக அரசு. அதே நேரம், அந்த ஒரு நாள் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, வேறு எந்த சம்பவமும் இல்லை. இந்த 12 நாட்களாக படப்பிடிப்பு சுமூகவாகவே நடந்து வருகிறது.

    ஹைதராபாத்துக்கு மாற்றமா?

    ஹைதராபாத்துக்கு மாற்றமா?

    இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்துக்கு மாற்றுவதாக செய்தி வெளியானது. கன்னடர் எதிர்ப்பால்தான் இந்த முடிவு என்று அதற்கு ஒரு கிளைக் கதையும் கூறியிருந்தனர்.

    இல்லை இல்லை

    இல்லை இல்லை

    ஆனால் இதுகுறித்து லிங்கா குழுவினரிடம் விசாரித்தபோது நம்மிடம் அவர்கள் இப்படிக் கூறினர்:

    கர்நாடகத்தில் எந்த இடத்தில் ரஜினி படத்துக்கு அனுமதி மறுப்பு என்ற பிரச்சினையே கிடையாது. மைசூர் அரண்மனையின் குடியிருப்புப் பகுதியில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கான அனுமதி ஆரம்பத்திலேயே கிடைத்துவிட்டது.

    ஹைதராபாதில் ஒரு பாடல் காட்சி

    ஹைதராபாதில் ஒரு பாடல் காட்சி

    ஹைதராபாதில் எடுக்கப் போவது ஒரு பாடல் காட்சிதான். அது கூட சில தினங்கள் கழித்துதான் எடுக்கப்போகிறோம். அதுவரை மைசூரில் ஷூட்டிங் தொடர்கிறது," என்றார்கள்.

    English summary
    Lingaa crew denied reports on their decision to shift Rajini's Lingaa shoot to Hyderabad.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X