ரஜினியின் புதுப் படத் தலைப்பு 'லிங்கா'?

By Shankar

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு லிங்கா என்ற தலைப்பைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

'கோச்சடையான்' ரிலீஸுக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி.

இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

Rajini's new movie title is Linga?

பொன்.குமரன் கதை எழுத, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரு பாடலைப் பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

இந்தப் படத்துக்காக 10 தலைப்புகளை கே எஸ் ரவிக்குமார் எழுதி ரஜினியிடம் கொடுத்ததாகவும், அதில் லிங்கா என்ற தலைப்பை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தலைப்பை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டில் கே எஸ் ரவிக்கும் பதிவு செய்துள்ளாராம்.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ரஜினி.

இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். மே 2 முதல் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்குகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடத்துகிறார்கள். ரஜினி - சோனாக்ஷி பங்கேற்கும் பாடல் காட்சியும் இங்கு வைத்து படமாக்கப்பட உள்ளது.

ரஜினி பேரன் (தனுஷ் - ஐஸ்வர்யா மகன்) பெயர் லிங்கா. இந்தப் பெயரை தேர்வு செய்து சூட்டியவர் ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X