ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்குமா?.. நம்ம வாசகர்கள் சொன்ன அடடா பதில்!

By Siva

Recommended Video

Rajini In Politics : ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது- வீடியோ

சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்தது குறித்து ஒன்இந்தியா வாசகர்கள் என்ன தெரிவித்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

அரசியலுக்கு வருகிறேன், கட்சி துவங்குகிறேன், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்தார் ரஜினிகாந்த். அவர் கட்சி துவங்குகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டே ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

இதையடுத்து அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இருக்கும் அவர் கட்சி துவங்க மாட்டார் என்று பேசத் துவங்கிவிட்டனர்.

 ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது என்று பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளது குறித்து ஒன்இந்தியா இணையதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவு சுவாரஸ்யமாகவே வந்திருக்கு.

 கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

ஒன்இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 54.69 சதவீதம் பேர் ரஜினி அரசியலுக்கு வந்தால் மவுசு இருக்காது என்று தெரிவித்துள்ளனர். 26.15 சதவீதம் பேர் அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும் பார்ப்போம் என்று தெரிவித்துள்ளனர். வெறும் 19.17 சதவீதம் பேர் மட்டுமே பாலாஜியின் கணிப்பு பொய் என்று கூறியுள்ளனர்.

 அரசியல்

அரசியல்

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஜோதிடர் பேச்சை ஏன் நம்ப வேண்டும். அவர் நிச்சயம் வர மாட்டார். வந்தால் ஆதரவு இருக்காது என்பது அவருக்கே தெரிந்து தான் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் என்று ஒன்இந்தியா வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஆதரவு

ஆதரவு

சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு தான் நடக்கும். அதற்கு எதற்கு தற்போதே ரஜினி அரசியலுக்கு வர வேண்டும். அவர் நன்றாக திட்டமிட்டு வந்து நெத்தியடி அடிப்பார். அப்பொழுது பாருங்கள் இந்த ஜோதிடம் எல்லாம் பொய் என்பது உங்களுக்கே புரியும் என்று ரஜினியின் தீவிர ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கமல் ஹாஸன் அரசியல் கட்சி துவங்கினால் உடனே ரஜினியும் துவங்க வேண்டும் என்று இல்லை. எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தலைவருக்கு தெரியும். அதனால் அவர் வழியை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X