»   »  ரஜினியின் இன்றைய பேச்சை கேட்டு லைட்டா பயத்தில் இருக்கும் ரசிகர்கள்

ரஜினியின் இன்றைய பேச்சை கேட்டு லைட்டா பயத்தில் இருக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

சென்னை: ரஜினிகாந்த் இன்று பேசியதை கேட்டு ரசிகர்களுக்கு லைட்டா பயம் வந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். வரும் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

தலைவர் நிச்சயம் நல்ல வார்த்தை சொல்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்.

தெறி

தெறி

தலைவர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிட்ட பிறகு பாருங்கள், சும்மா அதிரும்ல என்று ரஜினி ரசிகர்கள் பெருமையாக சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்

அரசியல்

உங்களின் ஆசைப்படி நான் அரசியலுக்கு வருகிறேன் கண்ணா, கட்சி துவங்குகிறேன் என்று ரஜினி தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் 31ம் தேதியை எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள்.

காலம்

காலம்

இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி எல்லாம் காலத்தின் கையில் உள்ளது. காலம் தான் முக்கியம். காலம் வரும்போது தானாக வருவார்கள். அது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும் என்றார்.

மறுபடியும் முதலில் இருந்தா

மறுபடியும் முதலில் இருந்தா

ரஜினியின் இன்றைய பேச்சை கேட்ட ரசிகர்கள் தலைவர் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறாரே என்று கலக்கம் அடைந்துள்ளனர். சும்மாவே எந்த 31ம் தேதி என்று கேட்டு ஆளாளுக்கு கலாய்க்கும் நிலையில் ரஜினியின் இன்றைய பேச்சு அவரின் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

English summary
Rajinikanth has addressed his fans at the Raghavendra hall in Chennai on friday. He spoke about the importance of time, cinema and politics. Rajini's fans are upset after hearing his speech.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X