twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிராஜா தலைமையில் பைரவி கலைஞானத்திற்கு பாராட்டு விழா - ரஜினி பங்கேற்பு

    |

    Recommended Video

    பாரதிராஜா தலைமையில் பைரவி கலைஞானத்திற்கு பாராட்டு விழா - வீடியோ

    சென்னை: சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை எழுதி, இன்றைய கதாசிரியர்களுக்கு சவாலாக உள்ள கதாசிரியர், பைரவி படத்தின் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று பாராட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இன்றைய கதாசிரியர்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கதை மன்னனாக சாதனை புரிந்தவர் கலைஞானம். இவர் பைரவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். சிறந்த எழுத்தாளர் மற்றும் நடிகரும் ஆவார். புதுப்பட்டி பொன்னுத்தாயி, நெல்லிக்கனி, நீதிக்கு ஒரு பெண் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

    Rajinis to be headed for appreciation ceremony to Kalaignanam

    இப்படி எல்லாம் சொன்னால் இவர் யார் என்று இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்கள் பலருக்கு தெரியாது. இயக்குநர் பாக்கியராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாலகுமாரன் இயக்கிய இது நம்ம ஆளு படத்தில் பாக்கியராஜுடன் சேர்ந்துகொண்டு நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு காமெடியில் கலக்கியிருப்பாரே, அவரே தான் இவர் என்று சொன்னால் தான் உங்களுக்கு புரியும்.

    ஆரம்பத்தில் வில்லனாகவும், பின்பு இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவும் தமிழ்த் திரைப்படங்களில் வலம் வந்து கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை முதன் முதலில் தன்னுடைய சொந்த தயாரிப்பான பைரவி திரைப்படத்திற்காக கதாநாயகனாக நடிக்கவைத்த பெருமைக்குரியவர் கலைஞானம் தான். அதனால் தான் ரஜினி காந்த் கலைஞானத்தை பிறரிடம் அறிமுகப்படுத்தும் போதும் இது பற்றி குறிப்பிடுவது வழக்கம்.

    குறிப்பாக ரஜினி இரண்டு நபர்களைக் கண்டால் மட்டுமே சட்டென்று எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவிப்பார். அதேபோல் வாசல் வரை வந்து வழியனுப்பி வைப்பார். ஒருவர் மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர். மற்றொருவர் சாட்சாத் கலைஞானம்தான்.

    கலைஞானம் 2014ஆம் ஆண்டு ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அவரின் இத்தனை ஆண்டு சேவையை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இப்பாராட்டு விழா மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அமைச்சர்கள் திரு.கடம்பூர் ராஜு, மற்றும் திரு.விஜயபாஸ்கர் தலைமையில் நடக்கவிருக்கிறது.

    இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்குகொண்டு கலைஞானம் அவர்களை பெருமைப்படுத்த இருக்கிறார். அந்த பாராட்டு விழாவிற்கு தமிழ் இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

    டெய்ல் பீஸ்

    முதன் முதலில் ரஜினியையும் பாம்பையும் ஜோடி சேர்த்த பெருமையும் கலைஞானத்தையே சேரும். இவர்தான் பைரவி படத்தில் ரஜினியுடன் பாம்பையும் இணைந்து நடிக்க வைத்தார். அதன் பின் ரஜினி நடித்த, தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை, படையப்பா என ரஜினி-பாம்பு ஜோடி சக்ஸஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajani Kanth is to be headed for appreciation ceremony for the author for over 70 years of storytelling and writing in the Tamil Cinema field.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X