Rajini: “ரஜினியை அப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்!

சென்னை: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது.

இந்நிலையில், இரு தினங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினி உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சர்ச்சையாகியுள்ளது.

முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது வைரலானது.

இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து தற்போது சத்யராஜ் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார்.

 Rajini: Sathyaraj put an end to the controversy that Rajini is the superstar

ரஜினியை அப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது: கடந்த ஒரு மாதமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினி தான் ட்ரெண்டிங்கில் உள்ளார். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய 'சூப்பர் ஸ்டார் ட்ரெண்டிங்' இப்போதும் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெளியான ஜெயிலர் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 450 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது உத்திரபிரதேசம் சென்றுள்ள ரஜினி, நேற்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இந்த விவகாரத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே நடிகர் சத்யராஜ்ஜும் ரஜினி குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. சத்யராஜ்ஜின் ஆரம்பகாலங்களில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் ரஜினி.

ஒருகட்டத்தில் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும், ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாது எனக் கூறி ஷாக் கொடுத்திருந்தார். அதோடு இல்லாமல் நான் ரஜினிக்கு வில்லனாக நடித்தால், எனது படத்தில் சூப்பர் ஸ்டார் வில்லனாக நடிப்பாரா என சத்யராஜ் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 Rajini: Sathyaraj put an end to the controversy that Rajini is the superstar

இந்நிலையில் தற்போது ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து சத்யராஜ் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சத்யராஜ் நடித்துள்ள 'அங்காரகன்' படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், "ரஜினி தான் எப்போதுமே சூப்பர் ஸ்டார்" எனக் கூறியுள்ளார். அதாவது, "சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார், அதை மாற்றக்கூடாது. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும் தான்."

"ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர். ரஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா?. தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா?. சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த், உலகநாயகன் என்றால் கமல், தளபதி என்றால் விஜய், தல என்றால் அஜித்" என பேசி சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X