twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோமாளியில் ரஜினி காட்சிகள் நீக்கப்படும்.. ரசிகர்களை சாந்தப்படுத்த ஐசரி கணேசன் எடுத்த அதிரடி முடிவு!

    கோமாளி படத்தில் இருந்து ரஜினி பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுகிறது.

    |

    Recommended Video

    Comali Movie Trailer-ல் ரஜினியை கலாய்த்தது ஏன்?..இயக்குநர் விளக்கம் | Director Pradeep

    சென்னை: கோமாளி படத்தில் இருந்து ரஜினி பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

    ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருகிறது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் கடந்த சனிகிழமை மாலை வெளியானது.

    படத்தின் கதைப்படி ஜெயம் ரவி ஒரு கோமா நோயாளி. 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து நினைவு திரும்பும் அவருக்கு இந்த உலகமே மாறியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனை நக்கலும், நையாண்டியுமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

    ரஜினியின் அரசியல் பிரவேசம்:

    ரஜினியின் அரசியல் பிரவேசம்:

    டிரெய்லரில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தையும் யோகி பாபு மற்றும் ஜெயம் ரவியை வைத்து கலாய்த்திருக்கிறார். இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். நடிகர் கமல் ஐசரி கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

    ஐசரி கணேஷ் பதற்றம்:

    ஐசரி கணேஷ் பதற்றம்:

    டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போதே, ரஜினி பற்றிய காட்சிகளை பார்த்து ஐசரி கணேஷ் பதறினார். "எனக்கும் ரஜினிக்கும் இடையே உள்ள நட்பை உடைச்சுடாதீங்கப்பா", என இயக்குனரிடம் கூறினார். கடந்த இரு தினங்களாக இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

    நீக்கம்:

    நீக்கம்:

    இந்நிலையில், ரஜினி தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்று அறிவித்துள்ளார். கமலிடமும் இதே வாக்குறுதியை அவர் தந்துள்ளார். ரஜினி ரசிகர்களை கூல் செய்யும் விதமாக இந்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால், படத்துக்கு ஏற்கனவே சென்சார் சான்று பெறப்பட்டு விட்டது.

    மீண்டும் சென்சார்?

    மீண்டும் சென்சார்?

    இதனால் காட்சிகளை நீக்கவோ, சேர்க்கவோ கூடாது. தற்போது ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டால், மீண்டும் சென்சார் வாங்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழு என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Comali movie producer Isari Ganesh announced that controversial spoof scenes on Rajini will be removed before its release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X