Rajini Shah Rukh Khan: ரஜினி-ஷாருக்கான் திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் போட்டோ... சம்பவம் என்ன?
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
ஜெயிலரை தொடர்ந்து இந்தியில் ஷாருக்கானின் ஜவான் இந்த மாதம் 7ம் தேதி வெளியாகி வெற்றிப் பெற்றது.
கோலிவுட், பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் இருவரும் அடுத்தடுத்து வெறித்தனமான ஹிட் கொடுத்து மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், ரஜினியும் ஷாருக்கானும் எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

ரஜினி - ஷாருக்கான் திடீர் சந்திப்பு?: கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் படு குஷியாகிவிட்டார். பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டிருந்த ரஜினிக்கு, ஜெயிலர் சூப்பரான கம்பேக் கொடுத்தது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் 600 கோடி க்ளப்பில் இணைந்தது. இதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டார் ரஜினி.
கோலிவுட்டில் ரஜினியின் ஜெயிலர் என்றால், பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் இந்த மாதம் வெளியானது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான், 900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சம்பவம் செய்துள்ளது. ரஜினி, ஷாருக்கான் என இரண்டு சூப்பர் ஸ்டார்களும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளனர். முக்கியமாக ஜெயிலர், ஜவான் இரண்டு படங்களுமே ஃபேன் பாய் சம்பவங்களாக அமைந்தன.
இந்நிலையில், ரஜினியும் ஷாருக்கானும் திடீரென சந்தித்துக் கொண்டது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சூப்பர் ஸ்டார்களும் அருகருகே அமர்ந்து ரொம்ப சிம்பிளாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ரஜினிக்கு வணக்கம் கூறும் ஷாருக்கான், ரஜினியின் பேச்சை கூர்ந்து கவனிக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இரண்டு சூப்பர் ஸ்டார்களும் அப்படி என்னதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என விதவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
அதேநேரம், இந்த போட்டோ சமீபத்தில் எடுக்கப்பட்டதா அல்லது ஏற்கனவே நடந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. சிலர் இது பழைய போட்டோ என்றும், இன்னும் பலர், ஜெயிலர், ஜவான் ரிலீஸுக்குப் பின்னர் நடந்த சந்திப்பு தான் எனவும் கூறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் ரஜினி, ஷாருக்கான் போட்டோ, இணையத்தில் திடீரென ட்ரெண்டாகி வருகிறது.
ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். அதேபோல், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் 'தலைவா ட்ரிபியூட்' சாங் மூலம் ரஜினிக்கு பெருமை சேர்த்தவர் ஷாருக்கான். சூப்பர் ஸ்டார் ரஜினி மீது எப்போதும் மரியாதையுடன் இருக்கும் ஷாருக்கான், அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











