»   »  '2.ஓ வில்லன் நான்தான்' ஷங்கரைக் கோபத்தில் ஆழ்த்திய முன்னணி நடிகர்

'2.ஓ வில்லன் நான்தான்' ஷங்கரைக் கோபத்தில் ஆழ்த்திய முன்னணி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: '2.ஓ படத்தின் வில்லன் நான்தான என்று பேட்டி கொடுத்து, இயக்குநர் ஷங்கரைக் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகர் சுதன்ஷூ பாண்டே.

அஜீத் நடிப்பில் வெளியான பில்லா -2 வில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தவர் சுதன்ஷூ பாண்டே. இவர் தற்போது 2.ஓ படத்தில் நடித்து வருகிறார்.


ஷங்கர் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடித்து வருகின்றனர்.மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.


Rajini-Shankar's 2.o Secrets now Revealed

இந்நிலையில் வில்லன் நடிகர் சுதன்ஷூ பாண்டேவின் பேட்டி ஷங்கரைக் கோபப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னதாக இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமார் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது.


இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக தான் நடித்து வருவதாகவும், 'எந்திரன்' படத்தின் வில்லனாக நடித்த டானியின் மகனாக தான் நடித்திருப்பதாகவும் சுதன்ஷூ பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.


மேலும், அக்‌ஷய்குமார் தான் உருவாக்கும் ரோபோ வேடத்தில் மட்டுமே நடிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனால் 2.ஓ படத்தின் ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


இப்படத்தின் புகைப்படங்களைக் கூட வெளியிடாமல் ஷங்கர் ரகசியம் காத்து வந்தார். ஆனால் சுதன்ஷூ பாண்டேவின் ஆர்வ மிகுதியால் தற்போது
படத்தின் கதையே வெளியாகி விட்டது.


இதனால் ஷங்கர் தற்போது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.மேலும் 2.ஓ படத்தின் கதையை அவர் மாற்றக் கூடிய சூழலும் தற்போது உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Read more about: shankar, ஷங்கர்
English summary
Actor Sudhanshu Pandey has confirmed that he is playing the baddie in Shankar’s 2.o Now Shankar Discontent for his Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil