ரஜினி சார் நீங்க சிஎம் ஆகணும்... தகுதியான ஒரே தலைவர் நீங்கதான்! - அதிர வைத்த அமீர் பேச்சு

By Shankar

சென்னை: ரஜினி சார், நீங்க தமிழ்நாட்டோட முதல்வர் ஆகணும். அதைத்தான் நாங்க எல்லோரும் எதிர்ப்பார்க்கிறோம். என் வாழ்நாளில் நான் தலைவர் என்று உச்சரிக்கும் ஒரே தலைவர் நீங்கள் மட்டும்தான், என்றார் இயக்குநர் அமீர்.

அமீரின் இந்தப் பேச்சு ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்துவிட்டது.

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்த லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.

இந்த விழாவில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Rajini should become the CM of Tamil Nadu - Ameer

அவரது பேச்சு:

ரஜினி சார்.. இங்கே பேசின எல்லாரும் பூடகமா ஒரு விஷயத்தைச் சொல்லிட்டுப் போனாங்க. நம்ம சேரன், விஜயகுமார் எல்லாம் சொன்னாங்க. அது வேற ஒண்ணுமில்ல.. நீங்க தமிழ்நாட்டோட சிஎம் ஆகணும்.. இதுதான் எல்லோருடைய ஆசையும் (அமீர் இதைச் சொல்லி முடிக்க, அரங்கம் அதிர்ந்து அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது!!)

சார், இந்த நம்பிக்கை பொய்யாக இருக்குமா? இங்கே நீங்கள் பார்க்கிற சில ஆயிரம் பேர் மட்டும் இப்படி கேட்கவில்லை.. வெளியில், இந்த தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பேரும் இப்படித்தான் சார் ஆசைப்படுகிறார்கள்.

30 ஆண்டுகளாக உங்க மேல மட்டும்தான் தமிழக மக்கள் இப்படியொரு நம்பிக்கையை வச்சிருக்காங்க.

Rajini should become the CM of Tamil Nadu - Ameer

இப்பக்கூட இந்த ட்ரைலர்ல இந்த நாட்டு மக்களுக்கு நான் எதாவது செய்யணும்-னு சொல்றீங்க. அதையேதான் நானும் சொல்றேன். அதுக்கான காலமும் கனிந்து வந்திருப்பதாக கடவுள் மேலருந்து சொல்றார்.

நீங்க அரசியலுக்கு வரணும்னு இந்த நாடே ஆசைப்படுது. அரசியலுக்கு வரணும்ங்கிற ஆசையுடன் நீங்க ஒரே ஒரு மேடை ஏறினா போதும்... இந்த மொத்த நாடும் உங்க பின்னால் வரும்.

ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசலாம். நீங்க பார்க்காத விமர்சனமா.. அரசியல்னு வரும்போது வேற ஒண்ணு வரும். அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சிங்கன்னா, களத்துல இறங்கி நடங்க.. நாங்க எல்லாரும் அப்படியே உங்க பின்னாடி வந்திடறோம்.

இந்த விஷயத்தைத்தான் இங்க நேரடியா உங்ககிட்ட சொல்ல பலர் தயங்கறாங்க. ஏன்னா எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விஷயத்தை உங்ககிட்ட மட்டும்தான் கேட்க முடியும், வேற யார்கிட்ட சார் கேட்க முடியும்?

என் வாழ்நாள்ல தலைவர்னு யார் பெயரையும் உச்சரித்ததில்லை. இன்னிக்கு முதல் முறையா சொல்றேன், அரசியலுக்கு வரத் தகுதியான இடத்தில் உள்ள, இந்த மக்களை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் நீங்கதான்!

-இவ்வாறு அமீர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X